அமெரிக்காவின் சாதுரியமான வெளியுறவு முறையில் இருக்கும் ஆனைத்து முறைகேடான விஷயங்கள் வெளியானது, துனிசியாவின் சீர்கேடான மன்னராட்சி முடிவுக்கு வந்தது, வெறும் 15 கோப்புறைகள் மூலம் எல்லா அரேபியா நாடுகளின் மனித உரிமை மீறல்கள், ஊழல் மற்றும் பல அடக்குமுறைகளை துனிலீக்ஸ் (Tunileaks) மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது, ரஷ்ய அமெரிக்க இடையில் இருக்கும் போலியான உறவுமுறை முடிவுக்கு வந்து பல நாடுகளும் அமெரிக்க ஒரு நம்பகமான நாடு இல்லை என்றும் NATO இன்று கலைந்து விடும் அபாயம், மற்றும் சீனாவின் மனித உரிமை மீறல் தான் அடுத்த வல்லரசு ஆகவேண்டும் என்ற பெரும் ஓட்டம், இந்தியாவின் அரசியல் முறைகேடுகள், இந்திரா காந்தியை கொலை செய்ய பாகிஸ்தானின் பங்கு என பல ஆதிக்க நாடுகளின் ரகசிய அரசியல் முறையையும் அம்பலமாகி உலகையே திருப்பி போட்ட எல்லா கிளர்ச்சிக்கும் காரணம் 24 வயது "பிராட்லி மான்னிங்" என்ற நபர் ஈராக்கில் விக்கிலீக்சுக்கு வெளியிட்ட செய்தியே.
செல்சியா ஈ மானிங் |
கடந்த ஆகஸ்ட் மாதம் மன்னிங்கின் தூக்கு தண்டனையை குறைத்து அமெரிக்க அரசு பிராட்லி மன்னிங்கை 35 வருடங்கள் சிறையில் அடைத்தது, இந்த தீர்ப்பு வெளியான ஒரு சில வினாடிகளில் பிராட்லி மன்னிங் தான் ஒரு பெண்ணாக வாழ விரும்புவதாகவும், சிறு வயது முதல் தன்னை ஒரு ஆண் என்று உணர்ந்ததை விட பெண் என்று தான் அதிகம் உணர்வதாக கூறினார்.
மேலும் தான் விடுத்த "என் வாழ்க்கையின் அடுத்த கட்டம் " என்ற பொது அறிக்கையில்:
எனக்கு கடந்த மூன்று வருடமாக ஆதரவளித்து வரும் அனைவருக்கும் என் நன்றிகள், கடுமையான சொதனைக் காலங்களில் நீங்கள் எனக்கு அனுப்பிய கடிதங்களும், எனக்காக நடத்திய போராட்டங்களும், செய்த பிரச்சாரங்களும் எனக்கு மேலும் அதிக தைரியம் தருகிறது. எனக்காக மிகவும் தைரியத்துடன் அரசாங்கத்தை எதிர்த்து போராடியவர்கள், என் பாதுகாப்பு நிதிக்காக உதவியவர்கள், என் வழக்கின் காரணமாக நீதிமன்றத்தில் காத்து இருந்த மக்கள், என் வழக்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி எனக்காக சட்ட பிரதிநிதித்துவம் செய்யும் "Bradley Manning Support Network" என் ஆதரவாளர்கள் ஆனைவருக்கும் நான் கடமைபட்டுள்ளேன்.
என் வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வாக, நான் எல்லோரும் என் உண்மையான அடையாளத்தை தெரிவிக்க விரும்பு கிறேன் " நான் செல்சியா மானிங்" நான் ஒரு பெண். இதை நான் குழந்தை பருவத்தில் இருந்தே உணர்ந்தேன். இதற்கான ஹார்மோன் சிகிச்சை விரைவில் தொடங்க இருக்கிறேன். என்னுடைய இந்த மாற்றத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று முதல் என்னுடைய பெண்மை பிரதிபெயரை பயன்படுத்த வேண்டும் என்றும் (வரையறை வசதி மற்றும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் தவிர) என்னை செல்சியா ஈ மானிங் என்று அழைக்கவும். என் ஆதரவாளர்களிடம் இருந்து கடிதங்களை பெற்று மீண்டும் எழுத வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்நோக்குகிறோம்.
நன்றி
செல்சியா ஈ மானிங்.
இந்த விசயத்தை ஏன் முன்பே செல்சிய தெரிவிக்கவில்லை என்றால் " இன்றைய சூழ்நிலையில் குற்றவாளி செய்த குற்றத்தை விட குற்றம் நிருபிக்க படும் முன்னரே அந்த நபரின் பாலினம், நிறம், பாலின ஈர்ப்பு என்பது ஒரு கேலிக்குரிய, விவதத்திகுரிய விசயமாக மாற்றப்படுகிறது, இவன் இந்த பாலினத்தில் இருந்ததால் தான் இந்த தவறு செய்தான் என்று பலருடைய வாதமும் அமைந்துவிடும் மேலும் தான் குற்றங்களை வெள்ளிச்சம் போட்டு கட்டியது ஒரு தவறு இல்லை என்றும் என்னால் பாலின சிறுபான்மையினரான திருனர் சமூகத்திற்கு அவப்பெயர் வரகூடாது என்றும் இந்த தருணத்தில் பொது தளத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன் படுத்தி இந்த உண்மையை பிரகடனப் படுத்தியதாக செல்சியா தெரிவித்தார். மேலும் தான் பெண்மையை போற்றும் வகையில் தன் கல்லூரி பருவவத்தில் ஒரு பெண் போல வேடமிட்ட சில புகைப்படங்களையும் வெளியிட்டார். இதை அறிவித்த ஒரு சில வினாடிகளில் விக்கிபீடிய மற்றும் பல சமுக வலை தளங்களில் பிராட்லியின் பெயர் செல்சியா என்று மாற்றப்பட்டது, அணைத்து ஊடகங்களும் ஒரு பெண் பால் அடையாளத்துடன் மன்னிங் தொடர்புடைய செய்தியை வெளியிடுகிறது. இன்று செல்சியா உலகளாவிய திருனர் சமூகத்தின் முன்மாதிரியாக பேசபடுகிறார்.
செல்சியாவின் இந்த அறிக்கை சட்ட ரீதியாக சிறை சார்ந்து திருனர் பாதுகாப்பு தொடர்புடைய அமெரிக்க சட்ட சாசனம் மற்றும் அமெரிக்க இராணுவ பாதுகாப்பு படை சாசனத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. பொதுவாக பாலின-பதட்டநிலை (Gender- Dysphoria) என்று அறியப்படும் இந்த நிலையை சென்ற ஆண்டு தான் அமெரிக்க மனோதத்துவ சங்கம் உளபிறழ்சி (Mental Disorder) என்ற பட்டியலில் இருந்து மாற்றி பாலின-பதட்டநிலை (Gender- Dysphoria) என்று அறிவித்தது. இதன் படி திருனராக உணரும் நபர் தகுந்த ஹார்மோன் சிகிச்சை பெற வேண்டும் தேவையான சிகிச்சை இல்லாமல் போனால் இது மணக்கவலை, தற்கொலை என்று பலவற்றிக்கும் தூண்டி கடுமையான உளவியல் துயரத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்க இராணுவ அதிகாரிகள் வெளியிட்ட பொது அறிக்கையில் பாலினம் சார்ந்து எந்த சிகிச்சை முறையையோ,வசதியோ பாதுகாப்பு படை சிறைகள் வழங்காது என்று தெரிவிகப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் எட்டாவது அரசியலமைப்பின் திருத்தம் படி
சிறைச்சாலைகள் மற்றும் மாநில முகவர் மத்திய பணியகம் உத்தியோகபூர்வ கொள்கையில் பாலின பதட்டநிலை சிகிச்சை மற்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவம், பாதுகாப்பு வழங்க ஆணை பிறப்பிக்க பட்டு உள்ளது, மேலும் நீதிமன்றங்கள் இதை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் சிறையில் இருக்கும் திருனருக்கும் இனி பிற பாலினத்தவரை போல அணைத்து வசதிகளும் கிடைப்பது ஊரிதியாகியுள்ளது.
இனி பெண்ணாக வாழப் போகும் செல்சியாவின் பாதுகாப்பை பல சமூக நல ஆர்வலர்களும் கண்காணித்து வருகின்றனர். மனித உரிமைகளின் கடவுள் போல் நடந்து கொண்ட அமெரிக்காவின் நிலை இது தான் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.
சில சமயம் எந்த வேருபாடும்மற்ற ஒரு சுதந்திர பூமியை உருவாக்க ஒரு கடுமையான, பலர் மனதையும் கனக்க செய்யும் ஒரு விலையை கொடுக்க நேரிடும், நான் சிறையில் உயிர் நீத்தாலும் உலகிக்கு ஒரு உண்மையை சொல்லி வெளிப்படையான நல்ல ஒரு வாழ்விடம் அமைய வழிவகுத்த அமைதியுடம் உயிர்நீப்பேன் என்றார் செல்சியா இன்று முக்கியமாக அரேபியா நாட்டின் சமூக ஆர்வலர்கள் செல்சியாவை தங்கள் விடிவெள்ளியாக காண்கின்றனர்.
ஆம் உலகின் அமைதிக்காக ஒரு வகையில் பாடுபடும் நாம் ஆனைவரும் ஒரு வகையில் செல்சியா மன்னிங் தான் ஒரு ஆப்ரிக்க சிறுவன் சொன்னது இது.
செல்சியாவிக்கு நீங்கள் கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Location | Commander, HHC USAG Attn: PFC Bradley Manning, 239 Sheridan Ave, Bldg 417 JBM-HH, VA 22211 |
---|