நான் ஒருபால் ஈர்ப்புடைய மனிதன் - ரிக்கி மார்ட்டின்


பியூர்டாரிகோவைச் சேர்ந்த பாடகர் ரிக்கி மார்ட்டின் தான் ஒரு 'கே' என்று கூறியுள்ளார். அப்படி இருப்பதற்காக பெருமைப்படுவதாகவும் அவர்  கூறியுள்ளார்.

இதுகுறித்து தனது இணையதளத்தில் அவர் எழுதியுள்ளதாவது...


இப்போது நான் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையான அன்புடன், ஏற்புத்தன்மையுடன், கடமையுடன் கூடியது. இதை எழுத நான் தயங்கவில்லை. எனது ஆழ் மனதின் அமைதியை இது வெளிப்படுத்துகிறது.

நான் ஒருபால் ஈர்ப்புடைய   மனிதன் என்று சொல்லிக் கொள்வதைப் பெருமையாக கருதுகிறேன். இப்படி இருப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் ரிக்கி.

விரைவில் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதப் போவதாகவும் கூறியுள்ளார் பாப் பாடகரான ரிக்கி மார்ட்டின். தனது வாழ்க்கையில் இது பெரும் திருப்புமுனையாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த உண்மையை இதுவரை தான் சொல்லாமல் இருந்ததற்கு தனது நண்பர்களே காரணம் என்றும் ரிக்கி கூறியுள்ளார். அப்படிச் சொன்னால் அதை உலகம் ஏற்காது, உண்மையை புரிந்து கொள்ளாது என்று அவர்கள் கூறியதால்தான் தான் இதுவரை சொல்லாமலேயே இருந்ததாக கூறியுள்ளார் ரிக்கி.

வாடகைத்தாய் மூலம் கடந்த 2008ம் ஆண்டு இரட்டைக் குழந்தைக்குத் தந்தையானவர் ரிக்கி என்பது நினைவிருக்கலாம்.

ரிக்கி மர்டின்னின் கலந்துரையாடல் பார்க்க:
                                      http://www.youtube.com/watch?v=I_juW7PP-qA