ரஷ்யாவின் அடக்குமுறைகடந்த ஜூலை 29  ரஷ்ய அதிபர்  விளாடிமிர் புடின் "சிறார்களுக்கு மத்தியில்  பாரம்பரியம் அல்லாத  பாலியல் உறவுகலுக்கு  பிரச்சாரத் தடை"விதிக்கும் மசோதாவில் கையெழுத்திட்டார் , பாரம்பரியம் அல்லாத LGBT  உறவுகளை இது குறிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். 

1993-ஆம் ரஷ்யாவில் ஒருபால் புணர்ச்சி சட்ட ரீதியாக  தவறில்லை என்று பிரகடனபடுத்தப் பட்டது  ஆனால்  இன்றுவரை அங்கு  ஒருபால் திருமணங்கள் மற்றும் ஒருபால் காதல் சட்டப்படி குற்றம். 

இந்த  சட்டத்தின்படி ஒருபால் ஈர்ப்பு மற்றும் திருனர் உரிமை தொடர்பான  எந்த செய்தியையும், விழிப்புணர்வையும், எந்த வகையிலும் வெளிபடுத்தும்  முயற்சியில் ஈடுபடும் ரஷியர்கள் மட்டுமல்லாமல்,வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும்  தண்டிக்கப்படும் நிலை உள்ளது,பெரிய அபராதம் தொடங்கி கடும் சிறை தண்டனை வரை இந்த சட்டத்தில் அடங்கும். பாரம்பரிய வானவில் LGBT ஊர்வலம் நடத்த கடுமையான தடை விதிகப்பட்டுள்ளது.


ரஷ்யாவின், கோச்சியில் 2014இல் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் ஒருபால் ஈர்ப்பு வீரர்களுக்கு பாதுகாப்பு கிடைக்காத நிலை இந்த சட்டத்தின் மூலம்  உருவாகியுள்ளது. ஒருபால் ஈர்ப்புடைய  போட்டியாளர்கள், மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள்  பொது இடத்தில போட்டியில் வெற்றி பெற்ற பின்பு வானவில் கொடியை உடலில் போர்த்தி வெற்றியை கொண்டாடுவதற்கு தடை மற்றும் ஒருபால் காதலர்களுக்கு முத்தம் கொடுப்பதக்கு தடை  அப்படி போட்டியாளர்கள்  அத்துமீறினால்  தண்டனைக்கு ஆட்படுத்தப்படும் நிலைமை உருவாகியிருக்கிறது அதனால் “2014 ரஷ்சிய  ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணியுங்கள்” என்று உலகம் முழுவதும்  இருக்கும்  ஒருபாலீர்பு நலன் சார்ந்த அமைப்புகள் போட்டிக்கு நிதி உதவி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் பங்குபெறும்  வீரர்களுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் சமிபத்தில் வெளியான  இந்த அரசானைக்கு  பிரிட்டன் , அமெரிக்கா , கனடாவில் உள்ளிட்ட நாடுகள், பல மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும்  சர்வதேச  ஓலிம்பிக் செயற்குழு என  பலதரப்பினர்களும் கடும் கண்டனம்  தெரிவித்து உள்ளனர்.அமெரிக்க அதிபர் ஓபாமா "இந்த பிற்போக்குதனமான செயல் தனக்கு  வருதம்மளிபதாக கூறியுள்ளார்,  மேலும் அமெரிக்க விளையாட்டு வீரர்கள் மிக கடினமாக பயிற்சி எடுத்து ஒலிம்பிக்ஸ்காக தயாராகி வரும் இந்த நேரத்தில் இது போன்ற விஷயங்கள் அவர்களின் தனியுறிமையை பறிப்பதாக உள்ளது  அதனால் இதை ரஷ்யா கவனத்தில் கொள்ளவேண்டும்" என்றார்.

 சர்வதேச  ஓலிம்பிக் செயற்குழுவின்  முதல்வர்  ஜாக்வோஸ் ரோச்சி "  கோச்சியில் 2014இல் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக்  போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களை நிறம், மதம் , நாடு, பாலினம், பாலினஈர்பு  என்று எந்த பேதமும் இல்லாமல் ரஷ்ய அரசு கவனிக்க வேண்டும். விளையாட்டு  என்பது ஒரு தனிநபர் உரிமை அதை எந்த அடிப்படையிலும் வேறுபடுத்தி ஒரு நபரை ஒதுக்க கூடாது என்றார். மேலும் ரஷ்ய அரசாங்கத்திடம் இருந்து இந்த சட்டத்தை போட்டி நடக்கும் நாட்களில் விலக்கி வைக்க வேண்டும் என்றும் ரஷ்ய அரசாங்கம் அணைத்து வகையான மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்க  எழுத்து பூர்வ  பதில் மற்றும் ஆணையை தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார்.


இந்த சட்டத்தைஇதுவரை ரஷ்யா பொருட்படுத்தவில்லை.அவர்கள் ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சட்டத்தில் இதுவரை ஆறு  நபர்களை கைது செய்துள்ளனர், இது தவிர்த்து  ஒருபால் உரிமை குறித்து ஆவணப்படம் எடுக்க முயன்ற நான்கு வெளிநாட்டு பயணிகளையும் கைது செய்துள்ளனர். எட்டு LGBT சமூக  ஆர்வலர்களையும் தண்டனைக்கு உட்படுத்தி உள்ளனர்.


இதுகுறித்து ரஷ்யாவின் விளையாட்டு துறை அமைச்சர் வித்தாலி மூட்கோ " ரஷ்ய நாட்டின் சட்டத்தை ஒலிம்பிக்கில் பங்கு பெரும் ஆனைத்து வீரர்களும் பின்பற்ற வேண்டும், எந்த காரணத்தை கொண்டும் ரஷ்ய அரசாங்கம் பிறப்பிய மசோதாவை திருத்தி சட்டத்தை பின்வாங்காது, தனிப்பட்ட நபர்களின் உணர்வுகளை ஆரசு அந்நபர்கள் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் வரையில் மதிக்கும் " என்றார்.

ரஷ்யாவின் இந்த சட்டத்தை  அந்நாட்டின்  தாராளவாதிகள் மற்றும்  சமூக ஆர்வலர்கள் சீற்றம் கொண்டு எதிர்த்து வருகின்றனர், 78 சதவீதம் ரஷ்ய மக்கள்  ஓரின பிரச்சாரத்தை  குறைக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பெரும்பாலான  மக்கள் இதை கண்டுகொள்ளவேயில்லை. 

லெனினியம், மார்க்சிய கருத்துக்கள் என்று பொதுவுடைமை சிந்தனைகள் தழைத்து வளர்ந்த  இந்த நாடு ஏனோ ஒருபால் விரும்பிகளின் நலனில் மட்டும் விரோதமான செயலில் ஈடுபடுகிறது. அதே நேரத்தில் முதலாளித்துவ நாடுகளான அமெரிக்கா மற்றும் பிரிட்டன்  இந்த விஷயத்தில் அம்மக்கள் நலனை முன்னிறுத்தி சட்டங்களை இயற்றி வருகிறது.