தமிழ்ஹிந்து.காம் ஆசிரியர் குழு முன்னுரை …

ஆண்டாள் வந்துதித்த ஆடி பூரமான இன்று இந்த புதிய தொடர் ’தமிழ்ஹிந்து.காம்’ இணையத்தில் தொடங்குகிறது. இந்த தொடர் சர்ச்சைக்குரிய தொடராக இருக்கலாம். ஆனால் தமிழ்ஹிந்து.காம் இதை சர்ச்சைக்காகவோ அல்லது பரபரப்புக்காகவோ வெளியிடவில்லை.  அறிவார்ந்த விவாதத்துக்காகவும்
andalஆழ்ந்த உரையாடலுக்காகவும் இந்த தொடர் வெளியிடப்படுகிறது. உடலை, உடலின் இயற்கை வேட்கைகளை, இயற்கை வேட்கைகளின் மாறுபாடுகளை சாபம் என்றும் பாவம் என்றும் ஒதுக்காமல் அவற்றையும் ஆன்ம விடுதலைக்கான கருவிகளாக மாற்றிய பண்பாடு நம்முடையது. ஆன்மிகமும் ஆன்ம அறிவும் அனைவருக்குமான பொதுவுடமை. அதை எந்த குறிப்பிட்ட  சமுதாயக்குழுவோ, இனக்குழுவோ அல்லது சித்தாந்த குழுவோ தன்னுடையது மட்டுமென உரிமை கொண்டாட முடியாது. இந்த குரலை எல்லா ஆன்மிக பண்பாடுகளிலும் கேட்க முடியும். இன்னும் ஒரு படி மேலே போய் அதை எந்த பாலினமும் ஆத்ம அறிவை தன்னுடையது என கூற முடியாது என்று சொல்லி அனைத்து பாலினங்களுக்கும் ஆன்ம அறிவு ஒரு அடிப்படை உரிமை என்பதை தானும் உணர்ந்து உலகுக்கும் கூறியது பாரத பண்பாடு.  எனவேதான் உடல்சார்ந்த ஆன்மிகத்தை ஒரு சமுதாயத்துக்கு கொடுத்து அதனை ஒரு ஆண்டில் ஒரு மாதம் முழுவதும் சடங்கு ரீதியாகவும் இலக்கிய ரீதியாகவும் உணர வைத்த ஆண்டாள் பிறந்த ஆடி பூரத்தில் இந்த தொடரை தொடங்குவதில் தமிழ்ஹிந்து.காம் பெருமையும் பேருவகையும் அடைகிறது.
மேற்கத்திய உலகில் LGBT (Lesbian Gay Bisexual Transgender) என்கிற பெயரில் ஒரு பெரிய இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் மேற்கிற்கே உரிய உயர்கல்வி நிறுவனங்கள் (academia) அரசு சாரா நிறுவனங்கள் (NGO) அமைப்புகள் மூலமாக இயங்குகின்றன. மேற்கத்திய வரலாற்றில் இன்று LGBT என்று அழைக்கப்படும் தன்மை/ போக்கு கொண்டவர்கள் மிக அண்மை காலங்கள் வரை வேட்டையாடி கொல்லப்பட்டார்கள். அரசு இயந்திரங்கள் -அது ஸ்டாலினோ ஹிட்லரோ- அவர்களை கொன்றொழிப்பதில் தனி சிரத்தை காட்டின. சில பத்தாண்டுகளுக்கு lgbt-ksமுன்னர் மேற்கத்திய உலகு முதலாளித்துவத்துக்கும் மார்க்சியத்துக்கும் மாற்றாக ‘கீழை தேய’ தத்துவங்களை கண்டடைந்த போது ஏற்பட்ட கிளர்ச்சி இயக்கங்களில்தான் இந்த LGBT விஷயங்கள் மெல்ல மெல்ல பேசப்பட்டு திரண்டு உரு கொண்டு எழுந்தன. மெதுவாக இதை ஒற்றைத்தன்மை கொண்டதாக்கி உயர்கல்வி அமைப்புகள் அலச தொடங்கின. அமெரிக்காவில் உருவான ஞானமல்லவா எனவே அதை கீழ்தேசங்களுக்கு மூன்றாம் உலக நாடுகளுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டாமா? அகாடமிக்குகளும் அரசு சாரா அமைப்புகளும் பெரும் டாலர் உதவியுடன் களமிறங்கின.  இருளும் அடக்குமுறையும் மட்டுமே கொண்ட மூன்றாம் உலகநாடுகளில் நசுக்கப்பட்டு வரும் LGBT சமூகத்தவருக்கு  உதவ அறைகூவல் விடுத்தன. டாலர்கள் கொட்டி கிடைக்கும் டாலர்கள் – மூன்றாம் உலக நாடுகள் – இவ்வளவும் இருந்தால் மதமாற்ற அமைப்புகளுக்கு மூக்கில் வியர்க்காமல் இருக்குமா என்ன…  இன்று நாம் இந்தியாவில் பார்க்கும் LGBT என்பது மேற்கத்திய குறிப்பாக அமெரிக்க இயக்கத்தை அப்படியே பிரதி எடுக்கும் ஒரு விசித்திரம்.
ஆனால்…
இதில் அடிபடுவதும்  அழிக்கப்படுவதும் இந்த தேசத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பாலினப்பன்மையை பேணி பாதுகாத்து வந்த ஒரு பண்பாட்டின் வெளிப்பாடுகள். அவற்றை அமெரிக்க LGBT அசுரத்தனமாக அழிக்கிறது. இங்கு ஏற்கனவே இந்த பாலினச்சிறுபான்மையினர் தம் உடல்சார்ந்துgender_minoritesஆன்மிக மரபுகளை சமுதாய உறவுகளை வளர்த்துள்ளனர்.  அவற்றில் கணிசமானவை ஆரோக்கியமும் அழகும் ஆழ்ந்த ஆன்மிக நலமும் உள்ளவியல் முக்கியத்துவமும் கொண்டவை.  உலகமெங்கும் சிறுமைப்படுத்தப்பட்ட கொடுமைப்படுத்தப்பட்ட வேட்டையாடப்பட்ட அந்த பாலின சிறுபான்மையினர் இங்கு மட்டும்தான் தமக்கென கோவில்கள் தமக்கென தெய்வங்கள் தம் உயர்வை உறுதி செய்யும் சமூக அங்கீகாரங்கள் கொண்டு வாழ்கின்றனர். ஆனால் அவை எல்லாம் காணாமல் போகின்றன. அவற்றை காப்பாற்றுவது யார்? ஒரு புறம் அமெரிக்காவை பிரதி எடுக்கும் LGBT என்றால் மறுபுறமோ விக்டோரிய ஒழுக்க விதிகளை இந்திய பண்பாடு என நினைக்கும் காலனிய மனசிறைக்குள் வசிப்பவர்கள். இந்த சூழ்நிலையில்தான் கோபிஷங்கரின் குரல் முக்கியத்துவம் பெறுகிறது.
கோபி ஷங்கர்… மாணவர்.  ஸ்ரீ ராமகிருஷ்ண -விவேகானந்த  வேதாந்த மரபில் வேர் கொண்டவர். இவருடனான உரையாடல்களில்  பாலினச்சிறுபான்மையினருக்கான சமூக பண்பாட்டு வெளி பாரத பண்பாட்டில் எத்தனை முக்கியமாக உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறவர்:
ஐயாயியரம் ஆண்டுகள் தொடர்ச்சியான இந்த பண்பாட்டில் மட்டும்தான் உடல்சார்ந்த Gopi1பாலினம் சார்ந்த பண்பாட்டு ஆன்மிக மரபுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாலினச்சிறுபான்மையினருக்கு மையத்துவம் அளிக்கும் உயிர் சடங்குகள், ஆன்மிக நெறிகள், தெய்வங்கள், திருவிழாக்கள் இங்குதான் உள்ளன. மாற்றுப் பாலினங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு அரசர்களாக இருந்திருக்கின்றனர். மாற்றுப்பாலினங்களைச் சார்ந்தவர்கள் இங்கு சமய மரபுகளை உருவாக்கியவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் மதபீடங்களை நிறுவியிருக்கிறார்கள். சம்பிரதாய மத எல்லைகளை கடந்த ஆன்மிகப் பண்பாட்டை கட்டி எழுப்பியிருக்கிறார்கள். பூசகர்களாக இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஆன்மிக வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். இவற்றை காப்பாற்றுவது நம் பெரும் பொறுப்பு.
பாரத பண்பாட்டில் மட்டுமல்லாது பிற பண்பாடுகளிலும் பாலினச் சிறுபான்மையினருக்கான வெளிகளையும் சாத்தியங்களையும் ஆராய்ச்சி செய்து வருபவர் கோபி.  எனவே பாரத பண்பாட்டை குறித்து அவர் கூறுவது சுய பண்பாட்டு பிரியத்தினால் அல்ல.
பாரதம் எங்கும் உள்ள   பாலினச்சிறுபான்மையினரின் பண்பாட்டு அம்சங்களை அவர் உணர்ச்சிபூர்வமாக விவரிப்பதை கேட்பதே ஒரு நல்லனுபவம். பண்பாட்டை பேசுவதுடன் அவர் நின்றுவிடவில்லை. BJP_book1அதன் அடிப்படையில் மாற்றுப்பாலினத்தோர் அல்லது பாலினச்சிறுபான்மையினருக்கான உரிமைகளை மீட்டுத்தருவதிலும் அவர் தீவிரமாக இயங்கி வருகிறார். பாலின வேற்றுமை என்பது குறித்த அறிவில்லாமல் பாரத தடகள வீராங்கனை சாந்தி சௌந்தரராஜனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக தொடர்ந்து  ஊக்கம் இழக்காமல் போராடி வரும் மிகக்குறைவான ஒரு சிலரில் இவரும் ஒருவர்.  அவரது நூல் ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’  இவ்விதத்தில் தமிழில் ஒரு முக்கியமான நூல். சரித்திர முக்கியத்துவம் கொண்ட நூல்.அந்த நூலை பாரதிய ஜனதா கட்சியின் திருமதி வானதி ஸ்ரீனிவாசன் வெளியிட்டது ஒரு வரலாற்று நிகழ்வு. வலதுசாரி என முத்திரை குத்தப்படும் பாரதிய ஜனதா கட்சி மேற்கத்திய அடையாளப்படுத்துதலில் ‘இடதுசாரி’ பிரச்சனை என கருதப்படும் ஒரு விஷயத்தை எடுத்து பேசுவது மிக அவசியமான ஒரு முன்னகர்வு. இன்னொரு விதத்தில் இந்துத்துவம் தன் வேர்களில் முக்கியமான ஒரு வேரை கண்டடைந்திருக்கிறது.
ஒரு மாணவராக திரு கோபி ஷங்கர் செய்திருக்கும் இந்த ஆவணப்படுத்துதல் தமிழில் ஒரு முன்னோடி நூலை உருவாக்கியிருக்கிறது. அவர் உருவாக்கிய ஒரு வலைப்பின்னல் இயக்கம் ’சிருஷ்டி’.  srishtiஅது அரசு சாரா அமைப்பு அல்ல. இன்னும் சொன்னால் அமைப்பே இல்லை. அதன் தன்மைக்கு சரியாக ஒரு படிமத்தை சொன்னால் புள்ளிகளால் உருவாக்கப்படும் கோலம். சாத்தியங்களை காட்டும் ஒரு இயக்கம். அந்த இயக்கத்தை அதுவும் மாற்றுப்பாலின சிறுபான்மையினருக்காக உழைக்கும் ஒரு இயக்கத்தை நடத்துவதற்கு அசாத்திய துணிச்சல் Hindu_of_the_Yearஒரு மாணவருக்கு வேண்டும். துணிச்சல் என்பதை விட ஆன்ம பலம் என்று சொன்னால் சரியாக இருக்கும். அது கோபி ஷங்கருக்கு இருக்கிறது. எனவேதான் ’ஜய ஆண்டின் இளம் இந்து விருது’ அவருக்கு தமிழ்ஹிந்து.காம் ஆசிரியர் குழுவின் முடிவின் படி அளிக்கப்பட்டது. அதனை அளித்தவர் சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.ஜோ டி குரூஸ் அவர்கள்.   இந்த தருணத்தை சாத்தியப்படுத்தியமைக்காக தமிழ்ஹிந்து.காம் திரு.கோபி ஷங்கருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறது.  அத்துடன் அவரது நூலிலிருந்து    பாகங்களை ஒரு கட்டுரையாக இன்றிலிருந்து ஒவ்வொரு வாரமும் வெளியிட முடிவு செய்துள்ளோம். அதற்கு அவர் அனுமதியை தந்துள்ளார். அதற்காக அவருக்கு தமிழ்ஹிந்து.காம் தனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறது.
இங்கு கோபி சங்கரின் நூலில் இணை ஆசிரியராக முக்கிய பங்காற்றிய விஜய் விக்கி அவர்களுக்கும் எங்கள் நன்றியையும் அன்பையும் தெரிவித்து கொள்கிறோம். இந்த நூலே விஜய் விக்கி இல்லாமல் இருந்தால் சாத்தியப்பட்டிருக்காது என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் கோபி.
ஆண்டாளின் குரலால் பக்குவமும் செழுமையும் உயர் ஆன்மிகமும் அடைந்த நம் பண்பாட்டில் கோபி ஷங்கரின் இயக்கம் அந்த மரபின் உண்மையான நீட்சி… இனி கோபி ஷங்கர்.

No comments:

Post a Comment