நாம் தினம் செய்யும் கொலை - கோபி ஷங்கர் © Srishti Madurai.


 “பாலினம்” (Gender) என்பது ஒருவரின் உடல் மற்றும் உணர்வு சம்மந்தப்பட்ட விஷயம்....“ஆண், பெண்” என்ற இரண்டு எல்லை வகுத்துக்கொண்டு, அதற்குள் ஒட்டுமொத்த பாலின அம்சங்களையும் இணைக்க முனைவது தவறான விஷயம்.... அந்த எல்லைகளை தாண்டி இருபதிற்கும் மேற்பட்ட பாலினங்கள் இருப்பதை நாம் இன்னும் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம்....“பாலின ஈர்ப்பு” என்பது பற்றியும் இன்னும் முழுமையான அறிவை நாம் பெறவில்லை....

ஒரு ஆண், பெண் மீதுதான் ஈர்ப்பு கொள்ள வேண்டும்/ ஒரு பெண், ஆண் மீதுதான் ஈர்ப்பு கொள்ள வேண்டும் என்ற வரைமுறையை வகுத்துக்கொண்டும் அதை தாண்டிய பாலின ஈர்ப்பு வகைகளை பற்றியும் இதுவரை நாம் அறிந்ததில்லை.... இங்கு நாம் ஒருபால் ஈர்ப்புக்கான உரிமை பற்றி பேசவில்லை....

இப்படி, ஒட்டுமொத்த“பால்புதுமையினர்” (Genderqueer) பற்றிய சமூக விழிப்புணர்வுக்கான களத்தை அமைத்து கொடுப்பதற்கான முயற்சியை நாம் செய்ய வேண்டும்....“பாலினம் மற்றும் பாலின ஈர்ப்பு” என்பது ஒருவரது தனிப்பட்ட உரிமை.... அந்த உரிமையில் தலையிடுவது, ஒரு தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதை போன்றது....“தான் எப்படி வாழ வேண்டும்?, யாராக வாழ வேண்டும்?” என்பதை தீர்மானிக்க ஒரு தனி மனிதனுக்கு உரிமை உண்டு... 

அத்தகைய உரிமைகளை பறிக்கும் நிலையை இந்தியாவில் நாம் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம்.... மேற்குலக நாடுகளில் பாலினம் மற்றும் பாலின ஈர்ப்பு தொடர்பாக ஆய்வுகளும், அறிவுகளும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது... ஆனால், நம் நாட்டில் இன்றும் தெளிவான இத்தகைய கருத்துகள் நம்மை அடையவில்லை....

உடலின் நோய்களை பற்றி படிக்க மருத்துவ துறை இருக்கிறது, கணினி முதல் சகல விஞ்ஞான அறிவியலை படிக்க பொறியியல் துறை இருக்கிறது, சட்டம் பற்றி படிக்க சட்டத்துறை, இலக்கியம் படிக்க இலக்கிய துறை என்று ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் வழிகள் அவற்றை அறிந்துகொள்ள நம் நாட்டில் இருக்கும்போது, ஒருவரது உணர்வு சம்மந்தப்பட்ட விஷயங்களான இத்தகைய“பாலினம் (Gender) மற்றும் பாலின ஈர்ப்பு (sexual attraction) தொடர்பான விஷயங்களை படிக்க, அவற்றை தெரிந்துகொள்ள ஒரு வழியும் இங்கில்லை.... 

நம் நாட்டில் மற்ற உலக நாடுகளுக்கு இணையாக தரமான பல பல்கலைகழகங்கள் இருக்கின்றன, அவற்றில் எந்த இடத்திலும் இதைப்பற்றிய ஒரு ஆய்வு கூட செய்யப்படவில்லை..... மற்ற நாடுகளில் இருபத்தைந்து ஆண்டுகளாக ஆய்வு செய்தும், அங்கீகரித்தும் வரும் ஒரு விஷயத்தை பற்றிய அறிவு இன்னும் 
நம் நாட்டில்“அரிச்சுவடி” அளவுக்கு கூட தெரியவில்லை.... பாலினம் தொடர்பான பல சர்ச்சைகளும், குழப்பங்களும் நித்தமும் உருவாகும் நம் நாட்டில், ஒரு உளவியல் படித்த மருத்துவருக்கு கூட இத்தகைய“பால் புதுமையினர்” பற்றிய அறிவு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை....
பாலினத்தை எப்படி வரையறை செய்வது? எந்த வகையான பாலினத்திற்கு எவ்வகையான கோட்பாடுகள் உண்டு? என்ற எவ்வித தெளிவும் இன்னும் நம் நாட்டில் உருவாகவில்லை.....“ஆண், பெண்” என்ற வகையோடு பல நாடுகளும்  “மற்றவர்கள்” என்ற ஒரு பிரிவையும் தங்கள் நாடுகளின் அதிகாரப்பூர்வ விஷயமாக அங்கீகரித்து உள்ளார்கள்.... 

இதன்மூலம் “பால் புதுமையினர்” (Genderqueer)பற்றிய ஒரு விழிப்புணர்வை அவர்கள் பெற்றிருப்பது நமக்கு தெரிகிறது.... நம்மை பொருத்தவரை“மற்றவர்கள்” என்று குறிப்பிடப்படுவது“திருநங்கை” மட்டும்தான் என்று நினைப்போம்.... ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை பற்றிய ஓரளவு தெளிவான அறிவை பெற்றிருக்கும் நாம், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய  “திருநம்பி”களை பற்றி நாம் பெறவில்லை.... பெண் உரிமைகள் பெரிதாக பேசப்படாத நம் நாட்டில், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய “திருநம்பி” பற்றிய விழிப்புணர்வு கிடைக்காததில் வியப்பொன்றும் இல்லை....

மேலும், 

இதைதாண்டிய எண்ணற்ற பாலினம் மற்றும் பாலின ஈர்ப்புகளை இணைத்து“பால்புதுமையினர்” பற்றி நாம் அறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்..... இதைப்பற்றிய தெளிவான புரிதல்கள் அந்தந்த மனிதர்களுக்கே இல்லாததால் நித்தமும் சிலர் தற்கொலைகள் மூலம் இறக்கின்றனர், பலர் உயிர் வாழ்ந்தும் நடைபிணமாய் வாழ்கிறார்கள்....“சமூக நிர்பந்தம் ஒருபுறம் தன் பாலினத்தை வரையறுக்கிறது, மறுபக்கம் தன் உடலும் உணர்வும் வேறு ஒருவிதமாக காட்டுகிறது” என்கிற குழப்பமான மனநிலையில் வாழும் எண்ணற்ற இளைஞர்கள் மன ரீதியில் நிறைய பாதிக்கப்பட்டு உள்ளனர்....

இத்தகைய நபர்களுக்கு கலந்தாய்வு கொடுத்து தேற்றும் பொறுப்பில் இருக்கும் மருத்துவர்களுக்கே இதைப்பற்றிய தெளிவு இல்லாததால், ஒரு மன நோய் மிக்க இளைஞர் உலகத்தை நாம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை..... நம் தெளிவான சிந்தனை இன்மையால் ஒரு மனதளவில் ஊனமுற்ற ஒரு இளைய சமுதாயம் உருவாக நாம் காரணமாக இருக்கிறோம் என்பதை நாம் ஏற்றே ஆகவேண்டும்....

“பாலியல் கல்வி வேண்டுமா?” என்கிற வாதம் பல நாட்களாக இருக்கும் ஒன்றுதான்.... வெறும் உடலுறவு சார்ந்த விஷயமாக இத்தகைய பாலியல் கல்விகளை சிலர் பார்ப்பதால் இப்படி கேட்கிறார்கள்....

நிச்சயமாக, ஆரோக்கியமான மனநலத்தை உருவாக்க பாலியல் கல்வி அவசியம்.... எந்த விஷயத்தை நாம் மூடி மறைக்க முயல்கிறோமோ, அது ஒருநாள் வெடித்து சிதறும்போது பல எதிர்விளைவுகளை நாம் அனுபவிக்க நேரிடும்.... பாலியல் கல்வி கொடுக்காமல், தெளிவான பாலியல் அறிவை நம் பிள்ளைகளுக்கு கொடுக்காததன் விளைவுதான், இன்றைக்கு நாம் நித்தமும் பார்க்கும் வன்புணர்வுகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்கிற வடிவத்தில் வெளிப்படுகிறது.....




பாலினம் என்று சொன்னால் உடனடியாக ஆண், பெண் ஆகிய இரண்டும்தான் நம் நினைவுக்கு வரும். இன்னும் கொஞ்சம் யோசித்தால் திருநங்கைகள் நினைவுக்கு வரலாம். உண்மையில், ஆண், பெண், திருநர் தவிர்த்து இருபதுக்கும் மேற்பட்ட பாலினங்கள் உலகில் உள்ளன என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?

பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படி பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. பாலினம் (Gender) என்பது வேறு,  பாலியல் -ஒருங்கினைவு (Sexual Orientation) என்பது வேறு. பொதுவாக, மக்களிடம் ஆண், பெண் பற்றிய விழிப்புணர்வே மேலோங்கி நிற்கிறது. சமீபகாலமாகத்தான் திருநங்கைகளமீது வெளிச்சம் பரவத் தொடங்கியிருக்கிறது.

என்னென்ன பாலினங்கள் இருக்கின்றன என்று சுருக்கமாகப் பார்ப்போம்:

பொதுப் பாலினம் 

1.    ஆண்-Male
2.    பெண்-Female

திருநர்– Transgender
1.    திருநங்கை– Transwomen
2.    திருநம்பி-Transmen

பால் புதுமையர்-Gender queer
1.    பால் நடுநர்– Androgyny
2.    முழுனர்– pangender
3.    இருனர்-Bigender
4.    திரினர்-Trigender
5.    பாலிலி–  Agender
6.    திருனடுனர்– Neutrois
7.    மறுமாறிகள்– Retransitioners
8.    தோற்ற பாலினத்தவர்– Appearance gendered
9.    முரண் திருநர்– Transbinary
10. பிறர்பால் உடையணியும் திருநர்– Transcrossdressers
11. இருமை நகர்வு– Binary’s butch
12. எதிர் பாலிலி– Fancy
13. இருமைக்குரியோர்– Epicene
14. இடைபாலினம்–  Intergender
15. மாறுபக்க ஆணியல்– Transmasculine
16. மாறுபக்க பெண்ணியல்– Transfeminine
17. அரைபெண்டிர்– Demi girl
18. அரையாடவர்– Demi guy
19. நம்பி ஈர்ப்பனள்– Girl fags
20. நங்கை ஈர்பனன்– Guy dykes
21. பால் நகர்வோர்– Genderfluid
22. ஆணியல் பெண்– Tomboy
23. பெண்ணன்– Sissy
24. இருமையின்மை ஆணியல்– Non binary Butch
25. இருமையின்மை பெண்ணியல்– Non binary femme
26. பிறர்பால் உடை அணிபவர்– Cross Dresser

இந்தப் பட்டியல் இன்னும் நிறைவடையவில்லை.

எதற்காக இப்போது இவர்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டும்? ஏனென்றால் நாம் வாழும் சமூகத்தில்தான் இவர்களும் வாழ்கிறார்கள். இவர்களையும் ஒன்றிணைந்துதான் சமுதாயம் இயங்குகிறது. சமுதாய மாற்றங்களுக்கு இவர்களும் பங்களிக்கிறார்கள். இதற்குப் பல எடுத்துக்காட்டுகளை வரலாற்றில் இருந்து அளிக்கமுடியும்.

இதைப்பற்றிய தெளிவான புரிதல்கள் அந்தந்த மனிதர்களுக்கே இல்லாததால் நித்தமும் சிலர் தற்கொலைகள் மூலம் இறக்கின்றனர், பலர் உயிர் வாழ்ந்தும் நடைபிணமாய் வாழ்கிறார்கள்....“சமூக நிர்பந்தம் ஒருபுறம் தன் பாலினத்தை வரையறுக்கிறது, மறுபக்கம் தன் உடலும் உணர்வும் வேறு ஒருவிதமாக காட்டுகிறது” என்கிற குழப்பமான மனநிலையில் வாழும் எண்ணற்ற இளைஞர்கள் மன ரீதியில் நிறைய பாதிக்கப்பட்டு உள்ளனர்.... இத்தகைய நபர்களுக்கு கலந்தாய்வு கொடுத்து தேற்றும் பொறுப்பில் இருக்கும் மருத்துவர்களுக்கே இதைப்பற்றிய தெளிவு இல்லாததால், ஒரு மன நோய் மிக்க இளைஞர் உலகத்தை நாம் உருவாக்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதுதான் உண்மை..... நம் தெளிவான சிந்தனை இன்மையால் ஒரு மனதளவில் ஊனமுற்ற ஒரு இளைய சமுதாயம் உருவாக நாம் காரணமாக இருக்கிறோம் என்பதை நாம் ஏற்றே ஆகவேண்டும்....


“பாலியல் கல்வி வேண்டுமா?” என்கிற வாதம் பல நாட்களாக இருக்கும் ஒன்றுதான்.... வெறும் உடலுறவு சார்ந்த விஷயமாக இத்தகைய பாலியல் கல்விகளை சிலர் பார்ப்பதால் இப்படி கேட்கிறார்கள்.... நிச்சயமாக, ஆரோக்கியமான மனநலத்தை உருவாக்க பாலியல் கல்வி அவசியம்.... எந்த விஷயத்தை நாம் மூடி மறைக்க முயல்கிறோமோ, அது ஒருநாள் வெடித்து சிதறும்போது பல எதிர்விளைவுகளை நாம் அனுபவிக்க நேரிடும்.... பாலியல் கல்வி கொடுக்காமல், தெளிவான பாலியல் அறிவை நம் பிள்ளைகளுக்கு கொடுக்காததன் விளைவுதான், இன்றைக்கு நாம் நித்தமும் பார்க்கும் வன்புணர்வுகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்கிற வடிவத்தில் வெளிப்படுகிறது.....

எதை நாம் மறைக்க முயன்றோமோ, அது தானாக வெளிப்பட்டதன் விளைவு இது.... இன்னும் தாமதித்தால் மிகப்பெரிய விளைவை நோக்கி நம்மை செலுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை..... உலகுக்கே  “காம சூத்திரம்” என்ற ஒரு அற்புதமான பாலியல் நூலை கொடுத்த நம் நாட்டில் இன்று பாலியல் அறிவு இல்லாததால் நிகழும் குற்றங்கள் எண்ணற்றவை...

இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?..... இதைப்பற்றிய சமூக விழிப்புணர்வுதான் ஒரே தீர்வு... ஆனால், சமூக விழிப்புணர்வுக்கு அடித்தளமாக இருக்க வேண்டிய மூன்று முக்கிய துறைகளில் இதைப்பற்றிய தெளிவு முதலில் உருவாக வேண்டும்.... கல்வித்துறை, மருத்துவத்துறை மற்றும் சட்டத்துறைகளில் இதை பற்றிய அறிவை நாம் கொண்டு சேர்க்க வேண்டும்.... இந்த மூன்று துறைகளும் எப்போது“பால் புதுமையினர்” பற்றிய தெளிவான மனநிலைக்கு வருகிறார்களோ, அன்றுதான் சமூக விழிப்புணர்வுக்கு நாம் அடித்தளம் அமைத்ததாக அர்த்தம்....அறிவியலும் மருத்துவமும் கண்டுபிடித்திருக்கும் இந்த உண்மைகளை நாமும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.... பழைய கருத்துகளை சொல்லி, உண்மைகளை மறைக்க கூடாது....“இளம்பிள்ளை வாதம்” என்கிற கொடிய நோய் நம் நாட்டில் நிறைய காணப்பட்ட நாட்களில், யாரோ வெளிநாட்டினர் கண்டுபிடித்துக்கொடுத்த“போலியோ சொட்டு மருந்து” என்கிற தடுப்பு மருந்தின் விளைவாக இன்று அந்த நோயின் சுவடே இல்லாமல் நம் மக்கள் இருக்கிறார்கள்.... வெளிப்படையாக தெரியும் நோய்க்கு அவர்கள் சொன்ன மருந்தை கொடுத்து நம் மக்களை காப்பாற்றினோம்.... மனதளவில் அதைவிட அதிக பாதிப்பை உண்டாக்கும் இத்தகைய“மனநோய்”களுக்கு அவர்கள் சொன்ன“பால் புதுமையினர்” கோட்பாட்டை அங்கீகரிப்பதில் தவறில்லை....


கிராமப்புறங்களில் இருக்கும் சொல்லாடல்களில், “மேல் வயிற்று பசி”, “கீழ் வயிற்று பசி” என்பது உண்டு.... இரண்டு பசிகளுமே மனிதனுக்கு அத்தியாவசியமானது தான்..... ஏனோ, அதில் கீழ் வயிற்றுப்பசியை பற்றி பேசுவது மட்டும் தவறாக பார்க்கப்படுகிறது.... ஒரு மனிதனுக்கு எப்படி சாப்பிட வேண்டும்? எதை சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? என்ற பல விஷயங்களை சொல்லித்தரும் நம் கல்வி முறை, கீழ் வயிற்று பசிக்கான ஒரு தெளிவையும் கொடுக்கவில்லை..... தாகம், பசி, உறக்கம் போன்று  “காமமும்” ஒரு இயல்பான மனித உணர்வுதான்.... ஒருவனை  “நீ இதைத்தான் நீ சாப்பிட வேண்டும்” என்று கட்டாயப்படுத்துவது எந்த அளவிற்கு தனி நபர் உரிமை மீறலோ, அதே அளவு தவறானது ஒருவனின் பாலின ஈர்ப்பு உணர்விலும் தலையிடுவது....“ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி பாலினம் இருக்கலாம்”, “ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் விருப்பப்படி பாலின ஈர்ப்பு இருக்கலாம்”, “ஒவ்வொரு மனிதனும் தன் பாலினத்தையும், பாலின ஈர்ப்பையும் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்க வேண்டும்” இத்தகைய உண்மைகளை நம் மக்கள் புரிந்துகொள்வதற்கான சரியான சமயம் இதுதான்.... ஒவ்வொரு விஷயத்திலும் நாட்டின் முன்னோடு மாநிலமாக இருக்கும் நம்“தமிழகம்” பால் புதுமையினர் விஷயத்திலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, இந்தியாவில் முதல் குரல் கொடுக்கும் முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை..... வளமான இளைய சமுதாயத்தை, தெளிவான மனநிலையோடு நாட்டில் உருவாக்க அரசு இதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்பது ஒவ்வொரு “மறைக்கப்பட்ட பாலின சிறுபான்மையினரின்” கோரிக்கை....


1.    பால்புதுமயினரின் (Genderqueer)  பாதிப்புகளை பதிவு செய்வது கடினமான பணி .  ஏனெனில் இவை மறைக்கபடுகின்றன மேலும் பால்புதுமயினரே தம்மை பால்புதுமையினர் என்று அடையாளபடுத்தி கொள்ளும் நிலையும் இங்கு இல்லை ஏனெனில் 
தம் பாலின அடையாளம்  குறித்த போதிய விழிப்புணர்வை  அடைய பாலின 
இருமையை அடிப்படையாக கொண்டுள்ள சமூகம் இடம் அளிப்பதில்லை.

2.         பால்புதுமையினர் (Genderqueer) சட்ட ரீதியாக தங்கள் மேல் தம் பாலினம் (Gender) காரணமாக தொடுக்கப்படும் உடல் , உணர்வு ,உள மற்றும்  பாலியல் ரீதியான வன்முறையினை  எதிர்பதற்காக சட்டங்கள் வேண்டும். குடியுரிமை, மருத்துவம் மற்றும் பல துறைகளில் தம் அடையாளத்தோடு சுதந்திரமாக வாழும் நிலைக்கான சட்ட ரீதியான முயற்சிகள் வேண்டும்.

3.         மருத்துவ அறிவியல், உளவியல் மற்றும் பிற சமூக அறிவியல் போன்ற துறைகளில் பால்புதுமையினர்(Genderqueer) குறித்த ஆராய்ச்சி முற்றிலும் இல்லை எனலாம்  பாலினம் குறித்து கற்கின்ற துறைகளில் பாலின இருமையினர் (BinaryGender) குறித்த ஆராய்ச்சிகள் மட்டுமே ஊகுவிக்கபடுகின்றன . இதனால் பால்புதுமயினரின் உலா,மட்டும் உடல் ரீதியான தனித்தன்மை வாய்ந்த தேவைகள் குறித்து அறியாத நிலை காணப்படுகின்றது.


4.    சிறுபான்மயினருக்குள்ளே  சிறுபான்மையினராக " (Minorities among Minorities) வாழும் நிலையில் தான் பால்புதுமையினர்(Genderqueer) இருக்கின்றனர்  தம் பாலினம் குறித்த தெளிவான அறிவும் பெரும்பான்மயானவரிடம் இல்லை. அதை தெரிவுபடுத்தும் வழிகளுக்கும்  இங்கே இடமில்லை  பிற பாலின சிறுபான்மையினரிடமிருந்து அணைத்து விதமான வன்முறையினை இவர்கள் அனுபவிக்கின்றனர்  அவர்கள் மட்டுமல்ல  இருமை எனும் ஆண்மை பெண்மையினை மட்டுமே வலியுறுத்தும் இந்த சமூகத்திலிருந்தும் கூட  பால்புதுமயினரின் தேவைகள் இருமை சார்ந்த பால் அடையாளம்  கொள்பவர்களால் (திருனர்-Transgender)இரண்டாம் பட்சமான ஒன்றாகவே கருதப்படுகின்றது  சமூகதில் தம் குரலை பதிவு செய்யும் வாய்ப்பும் திருநங்கைகளின் குரலில் மற்றும் பாகுபாட்டில் மறைக்கப்பட்டு விடுகின்றது

5.         தம் பாலினம்  அடையாளம் குறித்த போதிய விழிப்புணர்வின்மை, பால்புதுமயினரின் இருதலை மறுத்தல் "ஒரு கடந்து போகும் நிலை","ஒரு மன நிலையற்ற மன வியாதி " என்று பால்புதுமயினர் அடையும் ஓடுக்குமுறையும் , மனம், உடல் மற்றும் பாலினம் ரீதியான வன்முறையினையும் அனுதினம் அனுபவித்து வருகின்றனர்

6.         இருமை அடையாளம் (Binary- Identity as Male & Female) கொண்டுள்ள திருனர் (திருநங்கை, திருநம்பி)போன்றவரின் "பாலின மாற்று அறுவை சிகிச்சை " முறைகள் , பால்புதுமயினரின் பாலின மாற்று அறுவை சிகிச்சை முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றது . எடுத்துக்காட்டாக திருனடுனர் ஆன்-பெண் என்ற எந்த பாலினமும் தம் உடல் ரீதியாக அறியாதவாறு பாலின மாற்று அறுவை சிகிட்சை முறைகளை மேற்கொள்வர் இத்தகு விழிப்புணர்வு அற்ற நிலையில் இவர்களுக்குரிய மருத்துவ சிகிச்சை முறையானது சரியாக வழங்க முடியாத நிலை ஏற்படுகின்றது . இத்தகு விழிப்புணர்வு பல திருனடுனருக்கு கூட இல்லாத நிலையும், திருநங்கை/திருநம்பி என்ற இருமை அடையாளங்களில் தம்மை பொருத்தி கொள்ள வேண்டிய நிலை ஏற்ப்படுகின்றது .

7.         மருத்துவருக்கு பால் புதுமையினர் குறித்த போதிய விழிப்புணர்வு அற்ற நிலையில் பால்புதுமயினாராக தம்மை அடையாளம் கொள்ளும் ஒரு நபருக்கு மருத்துவ ரீதியாக சரியான வழிகாட்டுதலை வழங்க முடியாத நிலை ஏற்ப்படுகின்றது . மேலும் பால்புதுமையினர் குறித்த விழிப்புணர்வு இன்மையால் பால்புதுமயினரை ஒரு தவறான முன்தீர்மானத்துடன் அணுகும் நிலையும் ஏற்படுகின்றது.

Translated in Tamil by Vijay Vicky & John.


Lesbian Saint of Madurai © Srishti Madurai.

Vida Dutton Scudder
Vida Dutton Scudder is a rare example of a modern lesbian who is a recognized Christian saint (recognized by the US Episcopal Church, not the Roman Catholics). Her work and message are particularly relevant to the twentieth century, as we grapple with an economic crisis triggered in effect by corporate and consumer greed.

She was born in Madurai, South India on December 5 
1861, over a long life Scudder was an educator, writer, and welfare activist in the social gospel movement. Much of her thinking has particular relevance to us today, as we grapple with a financial and economic crisis precipitated in effect by a corporate and consumer culture marked by unrestrained greed. Throughout her life Scudder’s primary relationships and support network were women. From 1919 until her death, Scudder was in a relationship with Florence Converse, with whom she lived.She was one of the most prominent lesbian authors of her time.



After earning a BA degree from Smith College in 1894, in 1895 she became one of the first two American women admitted to graduate study at Oxford university. After returning to Boston, Scudder taught English literature at Wellesley College, where she becoming an associate professor in 1892 and full professor from 1910.

While studying in England, she had come under the influence of people like John Ruskin,Leo Tolstoi, George Bernard Shaw, and Fabian Socialism. Back in Boston, she became actively involved in promoting her socialist ideas, especially Christian socialism. In 1988, two years after her return from Oxford, she joined both the Companions of the Holy Cross, a women's group dedicated to intercessionary prayer and social reconciliation, and the Society of Christian Socialists . In 1890 she was a co-founder of the Boston "settlement house" Dennison House, part of a movement which had the goal of getting the rich and poor in society to live more closely together in an interdependent community, in which volunteer middle-class "settlement workers" would live, hoping to share knowledge and culture with, and alleviate the poverty of their low-income neighbors. From 1893 she was active in the trade union movement, and in 1911 she co-founded the Episcopal Church Socialist League and joined the Socialist Party, attempting to reconcile the conflicting doctrines of Marxism and Christianity. After the First World War, she also embraced capitalism, and in 1923 she joined the Fellowship of Reconciliation, giving a series of lectures before the Women's International League for Peace and Freedom in Prague.

After her retirement from Wellesley in 1928 until her death in 1954 at the age of 92, as Theresa Corcoran notes:

She continued to be in the storm center of advanced thought in the church and in society, supporting by her name and by her writing such groups as Reinhold Niebuhr's Fellowship of Socialist Christians and Rufus Jones's Wider Quaker Fellowship. She worked closely with the Christendom group in England, encouraged Mother Pattie Ellis in her desire to establish the Community of the Way of the Cross, a women's religious order combining active social work with monastic life, and followed closely the Reverend Frederick Hastings Smyth's Society of the Catholic Commonwealth.
Her socialism was not simply a political impulse, but sprang from her deep religious conviction and Gospel values, seeking to implement God's kingdom on earth. She valued her red Socialist membership card, but placed it in her personal oratory at home beside her crucifix. In the early years after the Russian Revolution she wrote that she "took delight in the Russian experiment", but later recognized that it too, could not guarantee justice, writing in her autobiography,
  "I'm afraid that Lenin would have scoffed at my treatment of the red flag given me at this time, which I placed beside the crucifix -- where it still hangs -- in my private oratory . . . I was doing my best to align a catastrophic and dialectical conception of history with my Christian thinking; and in communist revolution I discerned a Divine Judgment which was the sign of approaching redemption . . . But as coercion and cruelty were continuously impounded as means to reach justice and brotherhood, uncritical enthusiasm waned. Helped . . . by Franciscan studies, I became increasingly convinced that no revolution could bring ultimate salvation unless it proceeded from a Christian conception of man."
As we now recognize the failings of the unrelenting pursuit of profit that have brought us to our present crisis, we would do well to reflect deeply on these words. It is not neither the capitalist "system" that has created the problem, but the failure of our values. As Scudder writes, we need to return to a Christian conception of what it is to be human, remembering all the many warnings of Jesus Christ on the dangers of riches and the pursuit of wealth. Just to make things a little more complicated, take a look at Lillian Faderman's Odd Girls and Twilight Lovers: A History of Lesbian Life in the Twentieth Century. Faderman as the source for the information about Scudder and Converse's lesbian relationship, but other historians of sexuality have often criticized Faderman's work for counting women as lesbians who would not have counted themselves as such. In the case of Scudder, for example, Faderman first identifies her as a lesbian but then almost immediately has to admit that Scudder herself preferred terms like "romantic friendship." While Scudder admitted to romances with women in this sense, she also insisted that these relationships were either non-sexual or asexual. She referred to Converse as her "devoted companion." 

She is recognized as a saint by the Episcopal Church (USA), with a feast day on October 10.

PRAYER to VIDA SCUDDER

Most gracious God, you sent your beloved Son to preach peace to those who are far off and to those who are near: Raise up in your church witnesses who, after the example of your servant Vida Dutton Scudder, stand firm in proclaiming the power of the Gospel of Jesus Christ, who lives and reigns with you and the Holy Spirit, one God, now and for ever. Amen. 
(from a collection of lectionary resources for the Episcopal Church)

மறுக்கப்பட்ட நீதி

திருநங்கை சொப்னா
மதுரையை   சேர்ந்த திருநங்கை சொப்னா பத்தாம் வகுப்பில் 94%, 12-ம் வகுப்பில் 92% சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றவர் பாலின ரீதியான ஒடுக்குமுறை, சமுகத்தின் கிண்டல், ஏளனம் என்று பல கஷ்டங்கள்,  பிறப்பால் இசுலாமிய மதம் இதனால் மத ரீதியான அடக்கு முறை என்று எல்லா கஷ்டங்களை மீறி  பி. எ தமிழ் மற்றும் பி. சி. எ   படித்துள்ள இவர், சமீபத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்தார். அதில், பாலினம் என்ற இடத்தில் ஆண், பெண் என்று மட்டுமே இருந்ததால், இவரால் அதனை பூர்த்தி செய்ய இயலவில்லை. பெண் என்று தன்னை குறிப்பிட்டால்  தன்னையும் பிற பெண்கள்  போல கருதி சிறப்பு அங்கிகாரம்  இல்லாமல் போய்விடும் என்று தகவல் அறியும் உரிமை சட்டப்படி மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையதிற்கு தன்னுடைய கேள்வியை அனுப்பினார்.  

*  விண்ணப்பத்தில் ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்களை தவிர்த்து திருனர் (Transgender)  மற்றும் இதர பாலினங்களுக்கு ஏன்  இடம் இல்லை  ?

*   மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் திருனர் மற்றும் மூன்றாம் பாலினத்திற்கு முக்கியத்துவம் உண்டா ?

* மூன்றாம்  பாலினத்திற்கு இட ஒதுக்கீடு  உண்டா ?

* வயது மற்றும் ஜாதி  ரீதியான சலுகைகள் மூன்றாம் பாலினதிர்கும் செல்லுபடியாகுமா ?
 ஏன்  பிற பாலினங்களுக்கு (others) பிறர் என்று இடம் இல்லை ? என்று இவர் கேட்ட கேள்விகளுக்கு UPSC அளித்த பதில் " இந்த கேள்விகளை நீங்கள் அரசாங்கத்திடம் கேட்க்க வேண்டும், நாங்கள் இதற்கு பொறுப்பில்லை என்று பாலினத்தை  காரணம் காட்டி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது தேர்வாணையம்.

இதுகுறித்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நான்கைந்து முறை மனு கொடுத்துவிட்டார் சொப்னா. ஆனால் 'நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை' என்று கை விரித்தனர் அதிகாரிகள். இதனால் கடந்த மே மாதம் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் கண்ணீருடன் அவர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை சமாதானம் செய்து கலெக்டரை சந்திக்க ஏற்பாடு செய்தனர். அப்போது கலெக்டர், "இது அரசின் கொள்கை முடிவு என்பதால், மதுரை கலெக்டர் மட்டும் நினைத்தால் போதாது. அரசின் கொள்கை மாற வேண்டும். அது உங்கள் கையில் தான் இருக்கிறது" என்றார்.
இந்த நிலையில் மற்ற திருநங்கைகள் கேட்டுக் கொண்டும் அவர் போராட்டத்தைக் கைவிடவில்லை. "நாம் போராடினால் தான் அரசின் கொள்கை மாறும். இல்லை என்றால் என்ன படிப்பு படித்தாலும் நாம் அரசு வேலைக்குச் செல்ல முடியாது. கடைகடையாக கையேந்தியும், தப்பான தொழில் செய்தும் தான் பிழைக்க முடியும்" என்று சத்தம் போட்டார். உடனே போலீசார் அவரைப் பிடித்து டெம்போ வேனில் ஏற்றி காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றனர். கண்ணீருடன் தன்னுடைய பாடப்புத்தகங்களையும் சுமந்தபடி சென்றார்.
திருநங்கை ரேவதி இது குறித்து திருநங்கை ரேவதி கூறியது "நாங்கள் ஏன் ரேஷன் அரிசி மட்டுமே சாப்பிட வேண்டும், நாங்கள் ஏன் அரசாங்கம் அளிக்கும் சின்னச் சலுகைகளை மட்டுமே எதிர்பார்த்து 
வாழ வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. நாங்களும் பொது நிர்வாகிகளாக , வழக்கறிஞர் களாக, மருத்துவர்களாக, தொழிலதிபர்களாக உருவாக வேண்டும். ஆண்களுக்கு என்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அத்தனையும் பெண்களுக்கு வேண்டும் அதேபோலத்தான், ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அத்தனை உரிமைகளும் திருனருக்கும்  வேண்டும். ஒரே வரியில் சொல்வதானால், சமூக மதிப்பீடுகள் மாறவேண்டும்!.


திருனரின் நலன் குறித்து  உச்ச  நிதிமன்றத்தின் தேசிய சட்ட சேவைகள் அதிகார மையம்  (NALSA)  அக்டோபர் 2 2012  எல்லா மாநில அரசுக்கும் திருனருக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான அடிப்படை உரிமம், ரேஷன் கார்டு மற்றும் கல்வி நிறுவனங்களில்  அனுமதி, ஓட்டுநர், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற பல்வேறு வாய்ப்புகள் மற்றும் வசதிகளை  முறையாக வழங்க வேண்டும் என்ற  அறிவிப்பை வெளியிட்டது அனால் எந்த மாநில ஆரசும் இதற்கு தகுந்த பதில் அளிக்கவில்லை. 

இந்த அறிவிப்பு குறித்து மாவட்ட சட்ட சேவைகள் அதிகார  மையதிக்கும் எந்த விழிப்புணர்வும் இல்லை. அப்படி ஒரு அறிவிப்பு வெளியனத என்று மதுரை சட்ட சேவைகள் அதிகார மையத்தில் கேள்வி கேற்கின்றனர்.
ஸ்வப்னாவின் வாக்காளர் அடையாள அட்டை 

திருநங்கை ஸ்வப்னாவின் வாக்காளர் அடையாள அட்டையில் பாலினத்தில் ஆண் என்று  தமிழிலும் /female என்று ஆங்கிலத்திலும் குறிப்பிட்டுள்ளனர்    இதை அரசு அதிகாரிகளின் கவனகுறைவு என்பதா? இல்லை பகுத்தறிவு இல்லாத மனிதர்கள் அவர்களை கேலி செய்வது போல செய்தாரகளா? பிறர் என்று குறிக்க வேண்டும் என்று விண்ணபத்தை பூர்த்தி செய்தும் அவருக்கு இந்த நிலை. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திருநங்கைகள் தனது படிப்பை பதிவு செய்ய இயலவில்லை. மேலும் ஆண் மற்றும் பெண் என்ற பாலினத்திலும் அவர்களை பதிவு செய்ய இயலாது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். 

மேலும் திருநங்கைகள் தனது படிப்பை பதிவு செய்யதாலும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு இடஓதுக்கீடு இல்லை என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள். 

இந்த உலகத்தில் வாழும் சக மனிதரை போலதான் நாங்களும் ஆனால் மற்ற பிரிவினர்க்கு வேலைவாய்ப்பில் கொடுக்கப்படும் முன்னுரிமை கூட திருநங்கைகளுக்கு கிடையாது.என்றும் திருனர் என்றால்  திருநங்கையை மட்டும் குறிகின்றனர் திருநம்பியை பற்றி விளிபுனர்வே இல்லை. திருநங்கைகள் தங்களை பெண் என்றே குறிப்பிட விரும்புவர் பெரும்பாலான திருநங்கைகளுக்கு அவர்களை பிறர் என்ற பட்டியலில் மூன்றாம் பாலினம் என்று குறிப்பிட  விரும்பவில்லை என்றும் திருநங்கை பெண் என்று குறிப்பிடலாம் என்றும் கூறுகின்றனர்.


தனி மனிதனின் பாலின சுதந்திரத்தில் தலையிட யாரிற்கும்  உரிமை இல்லை. திறமையும் தகுதியும் வைத்து நிர்ணயிக்கபட வேண்டிய பல விஷயங்களை இன்றும் நமது நாடு பாலினம் மற்றும் ஜாதி, என்ற பல்வேறு காரணங்களைஅடிப்படையாக வைத்து பிரிக்கிறது. 

ஒருவர்  தாம் விரும்பி ஏற்று தேர்வு செய்த பாலினத்தினை  ஏற்றுகொள்ள நம்மில்எத்தனை பேருக்கு பக்குவம் இருக்கிறது? பெரும்பாலும் இல்லை என்பது தான் வேதனைக்குரியவிஷயமாகும். ஸ்வப்னாவின் பாலினத்தை அவர் அடையாலபடுதிகொள்ள முழு உரிமை வேண்டும். எந்த அரசாங்கதிற்கும், ஒருவரின் சொந்த பாலினத்தில் தலையிடும் உரிமை இல்லை. பாலினம் என்பது ஒருவரின் உளரீதியான, உணர்வு ரீதியான விஷயம். அதை, வெளிப்படுத்தி, அனைவரும் அறியும் பொருட்டு அதனை கேள்வி கேட்டு ஒருவரை சர்ச்சையாக்குவது பாலியல் மற்றும் பாலின விவகாரங்களில் நமக்குரிய முதிர்சியின்மையினை மட்டுமே காட்டுகின்றது.  இவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் . இவர்கள் சலுகைகள் கேட்கவில்லை தங்கள் வாழ்வுரிமைக்காக போராடுகிறார்கள், இவர்களுக்கு  சலுகை கொடுக்காவிட்டால் கூட பரவாயில்லை. அவர்களின் முன்னேற்றத்துக்கு தடை போடாத வகையிலாவது அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும். சமிபத்தில் ஆஸ்திரேலியா உலகில் முதல் முறையாக ஆண், பெண் மற்றும் தங்களை பாலின இருமைக்குள் சேர்க்க விரும்பாத பால்புதுமையரை (Genderqueer) சட்டப்படி அங்கீகரித்துள்ளது, இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பாலினங்கள் இருப்பது பற்றி  நம் நாட்டில் எந்த விழிப்புணர்வும் இல்லை.

  “பாலினம் மற்றும் பாலின ஈர்ப்பு” என்பது ஒருவரது தனிப்பட்ட உரிமை.... அந்த உரிமையில் தலையிடுவது, ஒரு தனிநபர் சுதந்திரத்தில் தலையிடுவதை போன்றது.... “தான் எப்படி வாழ வேண்டும்?, யாராக வாழ வேண்டும்?” என்பதை தீர்மானிக்க ஒரு தனி மனிதனுக்கு உரிமை உண்டு  அத்தகைய உரிமைகளை பறிக்கும் நிலையை இந்தியாவில் நாம் தொடர்ந்து உருவாக்கி வருகிறோம்.... மேற்குலக நாடுகளில் பாலினம் மற்றும் பாலின ஈர்ப்பு தொடர்பாக ஆய்வுகளும், அறிவுகளும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டது... ஆனால், நம் நாட்டில் இன்றும் தெளிவான இத்தகைய கருத்துகள் நம்மை அடையவில்லை....

நம் நாட்டில் “அரிச்சுவடி” அளவுக்கு கூட தெரியவில்லை.... பாலினம் தொடர்பான பல சர்ச்சைகளும், குழப்பங்களும் நித்தமும் உருவாகும் நம் நாட்டில், ஒரு உளவியல் படித்த மருத்துவருக்கு கூட இத்தகைய “பால் புதுமையினர்” பற்றிய அறிவு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை....
திருநம்பி  ராஜா

பாலினத்தை எப்படி வரையறை செய்வது? எந்த வகையான பாலினத்திற்கு எவ்வகையான கோட்பாடுகள் உண்டு? என்ற எவ்வித தெளிவும் இன்னும் நம் நாட்டில் உருவாகவில்லை..... “ஆண், பெண்” என்ற வகையோடு பல நாடுகளும் “மற்றவர்கள்” என்ற ஒரு பிரிவையும் தங்கள் நாடுகளின் அதிகாரப்பூர்வ விஷயமாக அங்கீகரித்து உள்ளார்கள்.நம்மை பொருத்தவரை “மற்றவர்கள்” என்று குறிப்பிடப்படுவது “திருநங்கை” மட்டும்தான் என்று நினைப்போம்.... ஆணாக இருந்து பெண்ணாக மாறிய திருநங்கை பற்றிய ஓரளவு தெளிவான அறிவை பெற்றிருக்கும் நாம், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய “திருநம்பி”களை பற்றி நாம் பெறவில்லை.... பெண் உரிமைகள் பெரிதாக பேசப்படாத நம் நாட்டில், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய “திருநம்பி” பற்றிய விழிப்புணர்வு கிடைக்காததில் வியப்பொன்றும் இல்லை....