பிங்கியின் பாலின சர்ச்சை © Srishti Madurai.


பன்மையில் ஒருமை பேசும் நம்மில், ஒருவரின் சொந்த உணர்வுகளை மதித்து அவரை அவர் விரும்பும்படி ற்று கொள்ளும் மனநிலையும், பக்குவமும் இருக்கின்றதா?
தனி மனிதனின் பாலின சுதந்திரத்தில் தலையிட யாரிற்கும் உரிமை இல்லை. திறமையும் தகுதியும் வைத்து நிர்ணயிக்க பட வேண்டிய பல விஷயங்களை இன்றும் நமது நாடு பாலினம் மற்றும் ஜாதி, என்ற பல்வேறு காரணங்களை அடிப்படையாக வைத்து பிரிக்கிறது. இதில் பெரும்பாலும் பாதிக்க பட்டவர்கள் விளையாட்டு துறையில் இருக்கும் பெண்களே. சமீபத்தில் மேற்கு வங்கத்தை சார்ந்த வீராங்கனை பிங்கி பிரமானிகின் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு மற்றும் அவரது பாலினம் தொடர்பான சர்ச்சைகள் உலகளாவிய அளவில் பெண் வீராங்கனைகளுக்கு நடக்கும் பல பாலின ரீதியான பாகுபாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.


பிங்கி ஏப்ரல் 10,1986 அன்று பருலியா-வில் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து தன்னுடைய பதினேழாம் வயதில் தொடங்கி 2007 வரை இந்தியாவிற்காக பல பதக்கங்களையும் பெருமைகளையும் உலக அரங்கில் வென்றவர் . கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பின்கியுடன் வாழ்ந்ததாக கூறப்படும் பெண் அளித்த புகாரின் பெயரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பல அரசியல் உள் நோக்கங்கள் மற்றும் சூழ்சிகள் நிறைந்த பின்கியின் வழக்கை பற்றி தெளிவான எந்த செய்தியையும் காவல் துறை மற்றும் ஊடகங்கள் வெளியிடவில்லை.


பின்கியுடன் வாழ்ந்ததாக கூறப்படும் அந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயாகி,விவாகரத்தும் பெற்றவர். இவரை பிங்கியின் துணைவர் என்றும்,அவர் பின்கியுடன் மூன்று வருடம் சேர்ந்து வாழ்ந்தவர் என்றும் பல மாறுபட்ட செய்திகள் உள்ளன. பிங்கியின் தந்தை வேறொரு பெண்ணிற்கும் தன் மகளிற்கும் இருக்கும் இந்த உறவை குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுதியிருகிறார் , ஆனால் பிங்கி இதையும் மீறி அந்த பெண்ணுடன் வாழ்ந்ததாக பல்வேறு கருத்துகள் நிலவுகிறது.


பிங்கியின் மீது பாலியல் வன்புணர்வு குற்றம் சுமத்திய அந்த பெண்ணை குறித்து பல்வேறு முன்னுக்கு பின் முரணான விளக்கங்களை நாம் கொடுக்கலாம். பிங்கி தன்னுடன் மூன்று வருடம் வாழ்ந்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்ற கருத்தினை எடுத்து கொண்டால், அந்த பெண்ணை ,பிங்கி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளக்கி இருப்பார் என்ற நிலை வருகின்றது. ஆனால், மூன்று வருடம் வாழ்க்கை துணைவராக வாழ்ந்தார் என்ற பார்வையில், இந்த செயலை நாம் எவ்வாறு பாலியல் வன்புணர்வு என்று எடுத்து கொள்வது? புரிந்துணர்வு இன்றி ஒருவர் இன்னொருவருடன் மூன்று வருடம் வாழ முடியுமா? மேலும், பிங்கி தன்னை வன்புணர்வும் சித்திரவதையையும் செய்தார் என்றால் இத்தனை நாளாக அந்த பெண் ஏன் இந்த விவகாரம் குறித்து பெண்ணுரிமை அமைப்புகளிலோ, இல்லை காவல் துறையிடமோ புகார் செய்யவில்லை ?.


தன் வழக்கு குறித்து எந்த தெளிவான கருத்துமில்லாமல் பிங்கியின் மீது அந்த பெண் புகார் கூறியிருக்கிறார்.

பிங்கி கைதான சில நாட்களில் மார்சிஸ்ட் கட்சியின் பாராளுமன் உறுப்பினரான ஜோதிர்மயின் கணவர அவதார் சிங்க்ஹின் தூண்டுதலால் தான் பிங்கியின் மீது புகார் செய்ததாக அந்த பெண் கூறியுள்ளார். ஏற்க்கனவே அவதார் சிங்க் மீது, பல்வேறு வழக்குகள் உள்ளன. பிங்கியின் நிலத்தினை கையக படுத்தும் பொருட்டே இந் சதி வேலையை நடந்ததாக பல்வேறு ஆதாரங்கள் கூறுகின்றன. இது குறித்து முன்பே, பின்கிகும் , அவதார் சிங்க்ஹிக்கும் பிரச்சனை இருந்திருக்கிறது. ஆனால், நிலத்தை கையகபடுத்தும் பொருட்டு அவதார் சிங்க் ஏன் இத்தகு பழியினை பிங்கி மீது சுமத்தியிருக்க வேண்டும்?.இதில் கவனிக்க வேண்டியது பிங்கி கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியான பொது, அவருடன் உறுதுணையாக இருந்தது ஜோதிர்மயி தான்.


இந்த புகார் குறித்து , ஜோதிர்மயியிடம் கேட்டபொழுது, அவர் தம் கணவர மீது சுமத்தப்பட்ட போலியான கருது இது என்று கூறினார்.

பாலின சுதந்திரம்?:
ஒருவர் தாம் விரும்பி ஏற்று தேர்வு செய்த பாலினத்தினை ஏற்றுகொள்ள நம்மில் எத்தனை பேருக்கு பக்குவம் இருக்கிறது? பெரும்பாலும் இல்லை என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.

பிங்கி எந்த பாலின,பாலியல் ஒருன்கினைவுடயராக(sexual orientation) இருந்தாலும், அவரின் பாலினத்தை அவர் அடையாலபடுதிகொள்ள முழு உரிமை வேண்டும். எந்த அரசாங்கதிற்கும், ஒருவரின் சொந்த பாலினத்தில் தலையிடும் உரிமை இல்லை. பாலினம் என்பது ஒருவரின் உளரீதியான, உணர்வு ரீதியான விஷயம். அதை, ெளிப்படுத்தி, அனைவரும் அறியும் பொருட்டு அதனை கேள்வி கேட்டு ருவரை சர்ச்சையாக்குவது பாலியல் மற்றும் பாலின விவகாரங்களில் மக்குரிய முதிர்சியின்மையினை மட்டுமே காட்டுகின்றது.


ஒருவரின் செயல் மற்றொருவரின் உணர்வையும் உடலையும் பாதிக்காத வரைக்கும் தனி மனித வாழ்கையும்,பாலினமும் அந்த தனி நபரின் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு உட்பட்டது , இன்றைய மருத்துவ பரிசோதனை , பின்கியை ண் என்று கூறுகின்றது. உயிரியல் பாலினம் தான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்ற கருத்தினை அடிப்படையாக வைத்து எழுந்த வெளிப்பாடே இது. மேலும் பிங்கிக்கு ஆடவர் பொய்-டையிலிங்க நிலை(male pseudo-hermaphroditism) இருப்பதாகவும் மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. அப்படியே, அவரை நாம் இடையில்ங்கதவர்(intersex) என்று கண்டரிந்தாலும், பின்கியை "ஆண்" என்று அடையாளபடுத்தும் முடிவு பின்கியை தவிர்த்து யாரிடமும் இல்லை. பிங்கி தன்னை பெண்ணாக அடையாலபடுதிகொள்ளும் ொது, ஏன் மருத்துவ பரிசோதனைகள் அவளை ஆண் என்று சொல்லி கட்டயபடுதுகின்றன? ஒருவர் இடையிலிங்கம் நிலையில் இருந்தாலும் அவருக்கு விரும்பும் பாலினத்தினை தேர்வு செய்து வாழ உரிமை உண்டு. தன்னை அந்த பாலினத்தவராய் உணர, செயல்பட உரிமை உண்டு. ஆனால் பிங்கியின் வழக்கில் இது தலை கீழாக மாற்றப்பட்டுள்ளது


ஆண் தன்மை?:-

பிங்கியின் மீது சுமதபட்டுள்ள ந்த வழக்கினை விசாரிக்கும் பொருட்டு, நீதிமன்றம் அவருக்கு பாலினம் தீர்மானிக்கும் சோதனை நடத்த உத்தரவிட்டது. உயிரியல் ரீதியா, இனபெருக்க உறுப்புக்கள் அடிப்படையில் நமக்கு வழங்கிய பாலின அடையாளங்களை மீண்டும் மீண்டும் உறுதி செய்வதே , இதன் நோக்கமாகும். பாலினத்தினை தீர்மானிக்கும் பாலியல் பரிசோதனை குறித்து அமெரிக்க உளவியல் அமைப்பு வெளியிட்டு அறிக்கையானது, அதன் நம்பகமற்ற தன்மையினை வெளிப்படுத்க்கின்ற்றது. மேலும், எத்தனனை இந்திய மருத்துவமனைகளில் ஒருவரின் பாலினத்தினை நிர்ணயம் செய்யும், பாலின தீர்மானிப்பு குழு உள்ளது? இது குறித்து வெளியான ஒரு செய்தியானது, பிங்கியின் பாலினத்தினை பரிசோதிக்கும் மருத்துவமனையில் அதற்குரிய முக்கிய வசதிகள் ல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.


உயிரியல் ரீதியான பாளினமானது, ாம் அடையாளப்படுத்தும் பாலியல் அடையாளத்துடன் பொருந்தி செல்ல ேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால், பிங்கி தாம் ஒரு திருனர்(transgender) அல்ல என்பதனை அடித்து கூறும் நிலையில் அவரை மீண்டும் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்துவது , ஒருவித உளவியல் மற்றும் உடலியல் சித்திரவதயாகும்.


பொதுவாக வீராங்கனைகள் மீது இத்தகு புகார்கள் எழுவது, இது முதல் முறையல்ல,. ஏற்கனவே சாந்தி சௌதரராஜன் அவர்கள் மீதும் இத்தகு புகார்கள் கூறப்பட்டது நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம். அவரின் பதக்கமானது பறிக்கப்பட்டது. மேலும், விளையாட்டு துறையின் விதிகள் படி, ஒரு வீராங்கனையின் பாளினமானது இன்னொருவர் அதை குறித்து சர்ச்சை எழுப்பதவரை , தீர்மானிக்கபடுவதில்லை., அந்த வீராங்கனை எவ்வாறு தம்மை அடையாளபடுத்தும் வகையில் அவரின் அவரின் பாலினம் அமையும்.

இந்நிலையில், பிங்கி மீது இதற்கு முன்னர் இத்தகு புகார் எழுந்ததில்லை. ஆனால், மதுரையில் நடைபெற்ற ஒரு தேசிய விளையாட்டு போட்டியில், பிங்கியிடம் ஆண் ஹார்மோன்கள்(excessive male hormones) மிகையாக இருந்ததால் விளையாட தட விதிக்கபட்டது.

ஆண், பெண் என்ற உடலியல், உளவியல் கட்டமைப்புகளை கடந்து, ஒருவரின் திறனை பார்க்கும் நிலையினை நம் சமூகம் இன்னும் அடையவில்லை என்பதாகும். எத்தனை பேர், இதனால் தம் திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் தம் வாழ்வை மாய்துகொண்டனரோ? பாலினங்கள், மற்றும் சமூகத்தின் கட்டமைப்புக்கள் மனிதருக்ககவே. ஆனால், இவை ஒருவரின் தனி மனித சுதந்திரத்தை, திறமையை பாதிக்கும் வகையில் அமையும் விதம் இருப்பது மிகவும் வேதனை அளிபதாகும்.



பாலியல் வன்புணர்வும் சட்டமும்(rape and law)

இந்திய சட்டப்படி பாலியல் வன்புனர்வானது ஒரு ஆணால், பெண் மீது மட்டுமே நிகழ்தபடுவது . . இதனால், ஒரு பெண், இன்னொரு பெண் ீது பாலியல் வன்புணர்வு புகார் செய்தால் அதை சட்டம் ஏற்றுகொள்ளது, இல்லை புகார் சுமதபட்டவர், எந்த பாலினம் என்று நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும். பிங்கியின் வழக்கில் அவர் "ஆண்" என்று குற்றம் சுமதபட்டாலும் ஒருவேளை அவர் பாலியல் வன்புணர்வு செய்தது உண்மையாகவே இருந்தாலும், அத சட்டமானது தண்டிக்க இயலாது. ந்நிலையில் , இரு தரப்பினருக்கும் சரியான நீதி கிடைக்காமல் போய் விடும். தெளிவு கொண்டு நாம் சட்டங்களை ஏற்றினால் இதக்கு சிக்கல்கள் இல்லை.



காவல் துறையும் உரிமைகளும் :

காவல் துறையானது , குற்றவாளி என்று சந்தேகிக்கப்பட்ட ஒரு நபரை , அவரின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படும் வரை ுற்றவாளி போன்று நடத்த கூடாது . ஆனால் பிங்கியின் வழக்கில் நடந்தது என்ன?

பிங்கியின் பாலினத்தை தீர்மானிக்கும் முன் அவரை காவல் துறை கையாண்ட விதம் மற்றும் ஆண்கள் சிறையில் அடைத்தது , போன்ற விஷயங்கள் மனித நேயமற்றது.மக்களின் தனியுரிமையை பாதுகாக்க வேண்டிய அரசும் . காவல் துறையும் ஒருவரின் தன்மானத்திற்கு இழுக்கு வருத்தும் பொருட்டு நடந்து கொண்டிருப்பது கண்டனதிற்க்குரியது . தம்மை பெண் என்று அடையாளபடுத்தும் ஒருவரை ஏன் ஆண்கள் சிறையில் அடைக்க வேண்டும் ?


மருத்துவ பரிசோதனையில் நான்கு ஆண் மருத்துவர் மற்றும் ஒரே ஒரு பெண் மருத்துவர் இருந்தது போன்ற விஷயங்கள் மிகவும் அதிர்ச்சிக்குரியவை . இதற்கிடையில் பிங்கியின் பாலியல் பரிசோதனை படங்கள் எவ்வாறு வெளியானது என்ற சர்ச்சை பெரும் புயலாக கிளம்பியது . பிங்கியின் விருப்பத்திற்கு மாறாக அந் பரிசோதனை நடந்தது அந்த பரிசோதனையின் போது பிங்கியின் எம்.எம்.எஸ் வீடியோ வெளியானது ேலும் மனித மாண்பை சிதைக்கும் ெயலாகும். இந்த சர்ச்சையால் பிங்கியின், ரயில்வே வேலையும் பறிக்கப்பட்டது.


இதனை வேதனைகளையும் தாங்கி கொண்டு சிறிதும் தன்னம்பிக்கை இழக்காமல் தான் ஒரு தையிரியம் மிக்க பெண் என்பதில் உறுதியாக இருகின்றார் பின்கி.


No comments:

Post a Comment