ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா - Asia's First Genderqueer Pride Parade by RJ Naveen Radio Mirchi

ஆண், பெண், திருநர் தவிர்த்து இருபதிற்கும் மேற்பட்ட பாலினங்கள் உலகில் உள்ளன.’ புருவங்களை உயர வைக்கும் இச்செய்தியை கண்டும் காணாமல் எவராலும் சென்றிருக்க முடியாது. ‘ஸ்ருஷ்டி’ என்கிற மாணவர் அமைப்பு மதுரையில் நடத்திய பேரணியில் தான் இடம்பெற்றிருந்தது இந்த வாசகம். வியப்பின் காரணமாகவும், அதனின் விளக்கம் கேட்டும் ‘ஸ்ருஷ்டி’யின் மதுரை நிறுவனர் திரு.கோபிசங்கரைச் சந்தித்தோம்.கல்விக்கும் பாரம்பரியத்திற்கும் பெயர் போன மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் தான் கோபிசங்கர் என்று தெரிந்ததும், அவரது கல்லூரி வளாகத்திலேயே அவருடன் நேர்காணல் கண்டோம்.


கே: ஆண், பெண், திருநர் தவிர்த்து இருபது பாலினங்கள் இருப்பது உண்மையா?
ஆம். பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படி கருதிக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. பாலினம் (Gender) என்பது வேறு,  பாலியல் -ஒருங்கினைவு (Sexual Orientation) என்பது வேறு. பொதுவாக, மக்களிடம் ஆண், பெண் பற்றிய விழிப்புணர்வே மேலோங்கி நிற்கிறது. எனினும், சமீபகாலமாக திருநங்கைகள் மீதான வெளிச்சமும் அளப்படியாகவே உள்ளது. அனால், உண்மையில் இருபதிற்கும் மேற்ப்பட்ட பாலினங்கள் உள்ளன. இப்போது இருக்கும் உலகில் இதற்கான விழிப்புணர்வு இன்றியமையாததாகிறது.


கே: அந்த பாலினங்களை பட்டியலிடமுடியுமா?
முடியும்.
அ) பொதுப் பாலினம் ஆண்- Male,பெண்- Female

 ஆ) திருநர் - Transgender
திருநங்கை - Transwomen
திருநம்பி- Transmen

 இ) பால் புதுமையர்- Gender queer
1. பால் நடுநர் - Androgyny
2. முழுனர் - pangender
3. இருனர்- Bigender
4. திரினர்- Trigender
5. பாலிலி -  Agender
6. திருனடுனர் - Neutrois 
7. மறுமாறிகள் - Retransitioners
8. தோற்ற பாலினத்தவர் - Appearance gendered
9. முரண் திருநர் - Transbinary
10. பிறர்பால் உடையணியும் திருநர் - Transcrossdressers
11. இருமை நகர்வு - Binary's bitch
12. எதிர் பாலிலி - Fancy
13. இருமைக்குரியோர் - Epicene
14. இடைபாலினம் -  Intergender
15. மாறுபக்க ஆணியல் - Transmasculine
16. மாறுபக்க பெண்ணியல் - Transfeminine
17. அரைபெண்டிர் - Demi girl
18. அரையாடவர் - Demi guy
19. நம்பி ஈர்ப்பனள் - Girl fags
20. நங்கை ஈர்பனன் - Guy dykes
21. பால் நகர்வோர் - Genderfluid
22. ஆணியல் பெண் - Tomboy
23. பெண்ணன் - Sissy 
24. இருமையின்மை ஆணியல் - Non binary Butch
25. இருமையின்மை பெண்ணியல் - Non binary femme
26. பிறர்பால் உடை அணிபவர் - Cross Dresser
இன்னும் பல...பாலினங்கள் பற்றிய முழுமையான அறிவை மக்கள் கொள்ள வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. இப்பாலினங்கள் குறித்த விழிப்புணர்வே இப்போதைய உடனடித் தேவை.


கே: உடனடித் தேவைக்கு அவசியம் என்ன?
சமுதாய மாற்றங்களுக்குத் தேவையான விதைகள் ஆண்களிடமிருந்தும் பெண்களிடமிருந்தும் மட்டும் வருவது இல்லை. மேற்கூறிய மக்களாலும் மக்களின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்ற முடியும். இதற்கு பல எடுத்துக்காட்டுகளை வரலாறு நமக்குக் காட்டுகிறது. பொதுவான பாலின கட்டமைப்பு விதிமுறைகளிலிருந்து விடுபட்டவர்களாக இருக்கும் இந்த பால் புதுமையினர் உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும்  பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் இதை நாம் சமூகவியல் , சட்டம் , மருத்துவம் , மதம்  மற்றும் அறிவியல் என்று பல்வேறு தளம் சார்ந்து அணுகினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். மேலும் இதை பற்றி விரிவான ஆராய்சிகள் 25து வருடங்களுக்கு முன்னரே  ஈவ் செட்விக்  (Eve Sedwick ) என்பவரால் கோணல் கோட்பாடு (queer theory) மற்றும் LGBTQI படிப்பு (Lesbian, Gay, Bisexual, Transgender, Queer & Intersex studies) என்ற ஆராய்ச்சி துறை 15 து  ஐரோப்பிய  மற்றும் அமெரிக்க பல்களைகலகங்களில் பாடமாக துவக்கப்பட்டது. இந்தியாவில் இதை பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை மேலும் பெரும்பாலான மக்களுக்கு திருனருக்கும் (Transgender) சமபாலீர்புடையோருக்கும் (Gay , Lesbian ) உள்ள வித்தியாசம் கூட தெரிவதில்லை. இந்தியாவில் இன்னும் வெளிப்படையாக இதை பற்றி யாரும் பேசவுமில்லை. இதனால் பாலின அகதிகளாக பலர் வாழ்கின்றனர், உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாலினம் இருக்கிறது. தனிமனிதனுக்கு தன்னுடைய பாலினத்தை தேர்வு செய்ய உரிமை உள்ளது, தனி நபரின் அந்தரங்க வாழ்கையில் தலையிட எந்த நபருக்கும் , அரசுக்கும் உரிமையில்லை. உலகில் மிக கொடுமையான விஷயம் நாம் வாழும் உடலை நாம் வெறுத்து வாழ்வது  ஒவ்வொரு மாற்றுபாலினத்தவரும் தங்களது உடலை வெறுத்து அன்றாட செத்துபிளைக்கின்றனர் .  உடல், மனம், பாலினம், பாலினஈர்ப்பு  பற்றிய அறிவின்மையே இதற்கு காரணம். இந்த விழா நடைபெறும் பொது கூட மூன்று நபர்கள் தற்கொலை செய்துகொண்டனர், கடந்த 2010 முதல் இந்த மாதம் வரை  இப்படி தங்கள் பாலினத்தை பற்றிய தெளிவில்லாமல், வாழ்வதற்கு போதிய சுதந்திரம் இல்லாமல் ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் தற்கொலை செய்துள்ளனர் இதை இந்திய அரசாங்கமும் கண்டுகோள்ளவில்லை. இப்படி பல பிரச்சனைகளை அடுக்கி கொண்டே போகலாம் மக்களுக்கு இதை பற்றிய விழிப்புணர்வை  தருவதே இந்த பிரச்சனையை  முடிவுக்கு கொண்டுவரும்.


கே:டுரிங் வானவில் விழா என்றால் என்ன?
 ஆலன் டூரின் என்பவரைப் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கி.பி 2500-ஆம் வருடம் நம் மனித சமூகம் எட்டியிருக்க வேண்டிய அதிநவீன வளர்ச்சியினை ஐம்பது எட்டு வருடங்களுக்கு முன்பே கொடுக்க வல்ல ஒரு அதிமேதாவியை நம் அறியாமை கொன்று விட்டது. தத்துவவியலின் விடிவெள்ளி,கணினி அறிவியலின் தந்தை, தர்க்கத்தின் அதிபதி, மறையீட்டியலின் அரசர், செயற்கை நுண்ணறிவின் கடவுள், உயிரின அமைப்பியலின் முன்னோடி என்று பல்துறை அறிவை உள்ளடக்கிய ஒரு அரும் பெரும் மேதாவி.!-அவர் தான் ஆலன் துரிங் (Alan Turing) ஒரு மனிதன் ஆயிரம் வருடம் வாழ்ந்தாலும் சாதிக்க இயலாத விஷயங்களை, நாற்பத்து ஓரு வயதிற்குள் எந்த வாய்ப்புமில்லாமல் சாதித்து காட்டியவர் துரிங். பாலின பாகுபாடு  என்ற ஒரே காரணத்தால் அவரின் தனி சுதந்திரம் பறிக்கப்பட்டு மிக ஆழ்ந்த துயரங்களில் வாழ்ந்த இவரின்   நூற்றாண்டு வருடமிது. அவரை கொன்ற அறியாமை நம் சமூகத்திலிருந்து விலகி விட்டதா? இல்லை.!, இருபத்தியோராம் நூற்றாண்டின் அரிய கண்டுபிடிபாகக் கருதப்படும் கணிணி உலகின் Artificial Intelligenceன் தந்தை டுரிங் . அவர் சமபால் ஈர்ப்புடயவர் என்ற காரணத்தினாலேயே ஆங்கில அரசு அவரைத் தற்கொலை செய்யத் தூண்டியது. துரிங்கை நினைவு  படுத்தும் விதமாக மதுரையின் முதல்  வானவில் திருவிழாவை  "டுரிங் வானவில் திருவிழா "  என்று பெயரிட்டோம்.



கே: ‘ஸ்ருஷ்டி’ அமைப்பு பற்றி?

ஸ்ருஷ்டி என்பது மாற்று பாலினத்தவருக்கான தமிழகத்தின் முதல் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி வட்டமாகும். பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்சினைகளை, சமூக பார்வையோடு அணுகி, அனைவருக்கும் இது குறித்த விழிப்புணர்வினை உ ருவாக்குவதே ஸ்ருஷ்டியின் நோக்கமாகும். இதன் தனித்துவம் என்னவெனில், இது முழுக்க முழுக்க மாணவர்களால் நடத்தப்படும் அமைப்பு சாரா, நிறுவனம் சாரா வட்டமாகும்.


கே: இப்போது நடைபெற்ற இந்த வானவில் திருவிழா திருப்தி அளிக்கிறதா?
பெரிய அளவில் திருப்தி அளிக்கிறது. ‘ஸ்ருஷ்டி’ இதை அறிவித்தவுடன் ‘NAZ’ அமைப்பின் நிறுவனர் திருமிகு .அஞ்சலி கோபாலனிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்தை நங்கள் பெரும் வெகுமதியாகக் கருதுகிறோம். இது முழுக்கவே மாணவர்களால் நடத்தப்படுவதால் மட்டுமே அவர் இசைந்தார். கடந்த 2009-ம் ஆண்டு, தில்லி உயர்நீதிமன்றம் புதுப்பித்த IPC 377-ம் சட்டத் திருத்தம் அவர்களாலேயே சாத்தியம் மற்றும் அஞ்சலி 2005 நோபெல் பரிசுக்காக பரிதிந்துரைக்க பட்டார், 2012 லண்டன் டைம் இவரை உலகின் அதிக செல்வாக்குள்ள பெண் என்று வெளியிட்டது, எய்ட்சால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நாட்டின் முதல் பராமரிப்பகத்தை உருவாகினார் . இவர் தவிர லீனா மணிமேகலை, திருநர் கல்கி சுப்ரமணியம்,ரேவதி, மற்றும் சாரு, கட்டியகாரி நாடகக்குழு  ஸ்ரீஜித் சுந்தரம், ‘சென்னை தோஸ்த்’ அமைப்பினர், ‘நிறங்கள்’ ஆகியோர் எங்களுக்குக் கொடுத்த ஆதரவு எங்களுக்கு முழு திருப்தி அளிக்கிறது.


கே: இதன் எதிர்கால பாய்ச்சல் எவ்வாறு இருக்கும்?
முழு வீச்சாக அமையும். குறிப்பாக, ஊடகங்களின் பங்கு இவ்விஷயத்தில் குறிப்பிடும்படியாக இல்லை. அதை முதலில் நிவர்த்தி செய்ய வேண்டும். காரணம், மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட ஊடகங்களால் மட்டுமே முடியும். இதற்கு முன்பும் பலர் இதைப் பற்றி பேசியிருந்தாலும், அதை இப்பொது முற்றிலும் புதிய பரிணாமத்திற்கு மாற்ற வேண்டிய கடமை இருப்பதாய் உணர்கிறோம். மிகவும் பழமையான பாரம்பரியமான நகரம் என்றழைக்கப்படும் மதுரையிலேயே இத்தகைய வரவேற்பு அமைந்தது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எங்களின் பணி, நாங்கள் எண்ணியது முடியும் வரை தொடரும்: முடிந்த பின்பும் தொடரும்!

ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா (Asia's First Gender queer fest)
ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா (Asia's First Gender queer fest)
ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா (Asia's First Gender queer fest)


ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா (Asia's First Gender queer fest)
ஆசியாவின் முதல் பால் புதுமையினர் விழா (Asia's First Gender queer fest)
Elen and Kiran our supporters 

No comments:

Post a Comment