உன் கண்ணில் பார்வையாய்,
உன் அசைவில் ஆர்வமாய்,
உன் நினைப்பின் நிழல்களாய்,
உன் வார்த்தையின் அர்த்தமாய்,
மாறிட புண்பட்ட ஒரு உயிரும் அலைய
ஆறாத காயத்திற்கு மருந்து இல்லை என்று தெரிந்தும்
கனவு ஒன்று கண்டேன் காயத்தை ஆற்றிட
அந்த கனவில் தொலைந்தவை நிஜமும் ஆகாது
அங்கு உண்மை கண்டேன் நானும்
தகுதியால் கிடைக்காத அன்பை நான் திறமையாய் கேட்க
வலிகளும், குழப்பமும் என்னை தடுத்த போது கண்டேன்
உன் மனதின் உயிராய் இருப்பவர் நான் இல்லை என்று
மாறாத மனதை மாற்ற முயற்சிக்கும் தருணம் மரண வலி என் நெஞ்சில்
உன்னுடன் வாழ முடியாவிட்டாலும் உன் நினைவுடன் வாழும் வாழ்க்கையும் ஒரு சுகம் தான்.
மனதின் இந்த நாடகம் முடிய வேண்டும்
உன் நினைவுகளுடன்
© Gopi Shankar
No comments:
Post a Comment