பால்நடுநர்: (Androgynous) என்பவர் யார்? - © கோபி ஷங்கர்

ரிதுபர்னோ கோஷ்
இவர் 11 தேசிய திரைப்பட விருதுகளையும், பல உலகளாவிய திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ள ஒரு சிறந்த இயக்குனர், நடிகர், அறிஞர் , இவரின் பாலினம் திரையுலகில் ஒரு ஒரு பெரிய சர்ச்சையை 
  உண்டாக்கியது. இவர்  பெரும் பாலும் பால் நடுநர் போலவே திகழ்ந்தார் அவர் தான் வங்காள மேதை ரிதுபர்னோ கோஷ்இவரே நவீன உலகின் பால்நடுனரின் சிறந்த எடுத்துகாட்டு


ஆணும் பெண்ணும் கலந்த கலவை.!

கலவைகள் என்றும் அழகானவை!         

இயற்கையில் எதுவும் இரு துருவங்கள் இல்லை. ஒளி வெள்ளையானது தான் , ஆனால் அதன் உள்ளே அமைந்திருக்கும் நிறங்கள் பற்பல. அவற்றின் ஒருங்கிணைப்பின் வடிவமே நாம் உணரும் வெள்ளை ஒளி. இயற்கையில் இவற்றை அறியும் நாம்மனிதனின் பாலினத்தில் இவற்றை கண்டுகொள்வதில்லை. ஆண் மற்றும்   பெண் என்ற இரு துருவங்களே பாலினம் என்பதை கடந்து        இவை ஒளியின் தன்மை , போலவே தம் பாலினமும் ஆண்மை மற்றும் பெண்மையின் கலவை என்று தம்மையேஅடையாளப்படுத்திககொள்ளும் மக்களே பால் நடுனருள் அடங்குவர். 

ஏன் இவர்கள் பண்பு இப்படி மாறுபடுகின்றதுநம்மில் பலர் அவர்கள் உடலில் ஆண் மற்றும் பெண்ணுக்குரிய தன்மைகள் அமைந்திருபதாலயே என்று நினைக்கலாம். ஆனால் அது தவறு ! இது மனம் சார்ந்த விஷயம்! இதை உணரந்தே ஆயிரகணக்கான
வருடங்களுக்கு முன் பாரதம் பாடிய பெருந்தேவனார்,

"நீல மேனி வாலிழை பாகத் 
தொருவ னிருதா நிழற்கீழ் 
மூவகை யுலகு முகிழ்த்தன முறையே"

என்று ஐங்குறுநூறில் இறைவனை புகழுகையில் அவரை ஆண் மற்றும் பெண்ணின் இரு தன்மைகளையும் கொண்டவர்   என்றுகூறுவது நோக்கத்தக்கது.

 திருநங்கையர் மற்றும் திருநம்பியரிலிருந்து இவர்கள் எங்கனம் மாறுபடுகின்றனர்
ஆணாய் பிறந்து தன்னை "முழுவதும்" பெண்ணாய் உணர்ந்து தன உடலையும் பெண்ணின் உடலை மாற்றவிரும்புவார்களே      திருநங்கையர்! 
இது போன்றதே திருனம்பியற்கும்.! 

ஆனால் ஆணாகவோ பெண்ணாகவோ பிறந்து தம்மை ஆண் என்றும் பெண் என்றும் கருதாமல் ,                இரண்டையும் கலந்த கலவையாகதம்மை உணர்பவர்களே
 பால்நடுனர்..!! 
தம்               உடலினை மாற்ற வேண்டும் என்ற விருப்பம் இவர்களுக்கு        இல்லை.

இவர்களுள் மூன்று பிரிவினர் உண்டு. ஆண்மையையும்                 பெண்மையையும் சரிசமமாக உணரும் நாடு பால் நடுநர்
(neutral androgynous / vers-androgynous),
 ஆண்மையினை அதிகமாகும் பெண்மையினை        குறைவாகவும் உணரும் ஆண்மை பால்           நடுநர்(butchandrogynes),பெண்மையினை அதிகமாகவும் 
ஆண்மையினை                         குறைவாகவும் உணரும்                 பெண்மை பால் நடுநர் (fem-androgynes) என்பவர்களே!
 இவர்களின் மனம் எத்தகையதுஉணர்சிகளை கையாளும் விதத்தில் சக ஆணை விடவோஇல்லை பெண்ணை விடவோ இவர்கள்சிறப்புடன் செயல்படுவதாக சாண்டரா பென்,க்ரூக்ஸ் அண்ட் பென் முதலிய உளவியல் அறிஞர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.மேலும் தம் வாழ்வினை இவர்கள் திருப்திகரமாக வாழ்வதாக லெப்கொவிட்த்ழ மற்றும் செல்டோ என்ற அறிஞர்கள்கூறுகின்றனர்.ஆராய்ச்சிகளின் படி ஒரு பால் நடுநர் பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள் , பால் நடுநர் அடையாளத்துடன் வாழும்சாத்தியம் அதிகம் என்பது பால் நடுநர் பண்பு மரபியல் ரீதியாக கடத்தப்படலாம் என்பதனை உறுதி செய்யும் விதமாக              அமைந்துள்ளது. 

 பால் நடுநர்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் எத்தகையவைமுதல் முதலில் பால் நடுநர்கள் என்ற பால் அடையாளம்இருப்பதேஅநேக மக்களுக்கு , 
ஏன், LGBT சமூகத்தில் இருப்பவர்கே தெரிவதில்லை. 
மூன்று                பாலினங்களைமட்டுமே அறியும் நமக்கு                இவர்களும்       திருநங்கயரே என்ற தவறான கருத்து எழுவது மிகவும் வருத்ததிற்குரியது. சட்ட ரீதியாக ஆண்,பெண் மற்றும் திருநங்கயினரை      மட்டும்         அங்கீகரிக்கும் சமூகம்,இவர்களை அங்கீகரிக்கும்     காலம் என்று?         கொஞ்சம் சிந்திப்போம். 


    

No comments:

Post a Comment