முழுனர்: pangender என்றால் என்ன? - © கோபி ஷங்கர்


முழுனர்: pan-gender
முழுமையும் கலந்து 
ஒருமை ஆனோம்!
அனைத்து பாலினமும்
வசிக்கும் ஒரு அழகிய வீடு!

முழுனர் (pangender) என்ற சொல்லே முழுமை என்ற அர்த்தத்தை தருகின்றதல்லவாஅதுபோலவே முழுனர்,அனைத்து பாலினங்களின் கூறுகளை உள்ளடக்கிய பாலின அடையாளத்தினை கொண்டவர்களே       முழுனர்கள். 

எந்த ஒரு பால் அடையாளத்தினைமுழுமையாக சாராமலும் தம் பாலினத்தினை வெளிப்படுத்துவர். 
எவ்வாறு மலையிலிருந்து உற்பத்தியாகும் ஒடையானது போலவே முழுனரும் எந்த ஒரு தனிப்பட்ட பாலின அடையாளத்தில் தேங்கிநிற்பவரல்ல. 

இவர்களின்    பாலினஅடையாளத்தினை உணராத பலர்இது ஒரு இடை நிலை  
அல்லது குழப்ப நிலை என்றும் சொல்லலாம். 
ஆனால் அது உண்மையல்ல. குழம்பி  தெளிவதற்கு இது ஒன்றும், மாசுபட்ட நீரல்ல! மாறாக உணர்வு.! பாலின உணர்வு! 

மேலும் கூறலாம்,முழுனர்களுக்கு அதிகமாக குழப்பம் உண்டு என்று! ஆனால் உண்மை என்னவென்றால்,முழுனர்கள் தாங்கள் முழுனராக
இருப்பதில்முழுனராக வாழ்வதில்  பிற பாலினத்தவரைப்  போலவே முழு மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.



 பல முழுனர்கள்தாம் யாரிடம் பாலீர்ப்பு கொள்கின்றனரோ
அதற்கு தக்கவாறு கூட தம் பாலின அடையாளத்தினை மாற்றிகொள்வர். 
எடுத்துக்காட்டாக, ஆணின் உடலுடைய ஒரு முழுனர்
தாம் இன்னொரு ஆணிடம் ஈர்க்கப்படும் போது ஒரு நம்பியாகவோ (Gay) , இல்லை ஒரு பெண்ணால் கூட ஈர்க்கப்படலாம். 
இத்தகு சிறப்பு பண்பினைஉணரா நிலையில்இவர்கள் பிறரால்பாலியல் இன்பத்திற்காகவே இவர்கள் இப்படி மாறுகின்றனர் என்று 
தவறாக கருத வாய்ப்புண்டு.

 பாலியல்இன்பத்திற்காக மட்டுமே பிற பாலினத்தவரின் உடை 
அல்லது அலங்காரங்களை அணிபவர்கள் வேறுமுழுனர் வேறு 
என்பதை நாம்உணர வேண்டும். 

 முழுனர்கள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கபடவேண்டும். தம்மை ஆண் 
என்றோ பெண் என்றோ திருநங்கை என்றோ கருதாததற்கு தனியாக சட்ட ரீதியான அங்கீகாரம் அளிப்பது மிகவும் அவசியமாகும்
ஏனெனில் ஆண்,பெண்,திருநங்கை என்பவை கடந்தவயே பாலினங்கள். 
அப்போது தான் முழுனர்கள் முழுமையாக சுதந்திரமாக தம்மை வெளிபடுத்த இயலும்.


No comments:

Post a Comment