இருனர்: Bi-gender
ஆண் என்ற பறவையும்
பெண் என்ற பறவையும்
சேர்ந்து வாழும் ஒரே கூடு.!
கடந்த 2012-ல் மிகப் பிரபலமான நரம்பியல்
ஆராய்ச்சியாளரும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் விளையனூர்
எஸ்.ராமச்சந்திரன் அமெரிக்காவில் தான் மேற்கொண்ட Alternating gender incongruity (AGI) என்ற ஆராய்ச்சியில் இருனர் மற்றும்
பல்வேறு பாலினம் பற்றிய தெளிவான அறிக்கையை சமர்ப்பித்தார். பால் புதுமையினருடன் தொடர்புடைய ஆராய்ச்சியாகவும் அதற்கு
அடித்தளமாகவும் அமைந்தது. இவர் ஆலடி கிருஷ்ணசுவாமி அய்யரின் பேரனாவார்.
ஒரே உடலில் இரு உயிர்கள் வாழ்வதை போன்றதே இருனரின் பாலின அடையாளமாகும். தான் ஒரு ஆண் மற்றும் பெண் என்று தம்பாலினத்தினை வரையறை செய்வர். இவர்களின் இத்தகு இரு முகங்களையே பெண்ணியல்(En Femme) மற்றும் ஆணியல்
(EnHomme)என்று குறிப்பிடலாம்.
பால் நடுநர்கள் தம்மை ஆணும் பெண்ணும் இணைந்த கலவை
என்றும் கருதுவர்,
ஆனால் இருனர் தம்மை
கலவை என்று கருதமாட்டார்.
தனித்தனியே தாம் ஒரு ஆண் என்றும் பெண் என்றும் கருதுவர். இவர்களுக்கு திருநங்கையர் போலே தம் உடலினை மாற்ற வேண்டும் என்ற ஆர்வம் கிடையாது.
ஆராய்ச்சிகளின் படி, திருனர்களுள் மூன்று சதவிகிதம் மக்கள்
இருனராக
தம்மை அடையாளம் கண்டு கொள்வதாக அறிவியல் கூறுகின்றது.
இது ஒரு மேல்நாட்டு ஏற்றுமதியா? இல்லை.
Ila Devi |
இந்து புராணங்களில் இருனர் பற்றிய குறிப்பு நவகிரகங்களுள்
ஒருவராகிய புதனின் துணைவியாகிய இலாவின் கதையில் பதிவாகியுள்ளது.
சிவன் மற்றும் பார்வதியால்ஒரு மாதம் ஆணாகவும் இன்னொரு
மாதம்பெண்ணாகவும் இருக்க சபிக்கப்பட்ட இலா, தான் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் புதனுக்கு துணைவியாகிறார்.
இங்கனம்இலா-விடம் இரு கூறான தனிதனி பாலினங்கள் உள்ளன.
இதுபோலவே இருனர்களிடம் , ஆண் மற்றும் பெண் என்ற தனித்தனியானபாலின அடையாளம் வெளிப்படும். ஒரு மாதம் ஆணாகவும் இன்னொரு மாதம் பெண்ணாகும் திகழும் இல போலவே, ஒரு நேரம்தம்மை முழு ஆணாகவும், இன்னொரு நேரம் தம்மை முழு பெண்ணாகவும் இருனர் கருதுவர்.
இதை வாசிக்கும் ஒருவர் இது பலஆளுமை கோளாறு என்று
கருதலாம்.
ஆனால் இது முற்றிலும் தவறு. இத்தகு கோளாறு உடையவர்கள் தங்கள் தினசரி நிகழ்வுகளை
மறந்துவிடுவர் மற்றும் அவர்களுக்குள்ளே இன்னொரு ஆளுமை இருப்பது குறித்து விழிப்புணர்ச்சி அவர்களின் மனதில் இருக்காது.
ஆனால், இருனர்கள், தம்மைச் சுதந்திரமாக, முழு நலத்துடன், தன்
பாலின அடையாளத்தினை ஏற்றுகொள்வர். அதில் வாழ்வதில்
அவர்கள் நிறைவடைவர், ஏனெனில் குழம்புவதற்கு இது மன நோய் அல்ல, மாறாக தம்மை தாமே உணர்வது.
No comments:
Post a Comment